IPL 2022: பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து வெளியேறியது ஏன்..? கேஎல் ராகுல் விளக்கம்

Published : Mar 21, 2022, 04:46 PM IST
IPL 2022: பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து வெளியேறியது ஏன்..? கேஎல் ராகுல் விளக்கம்

சுருக்கம்

பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து வெளியேறியது ஏன் என கேஎல் ராகுல் விளக்கமளித்துள்ளார்.  

ஐபிஎல்லில் 2018லிருந்து கடந்த 4 சீசன்களாக பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆடிவந்த கேஎல் ராகுல், அந்த அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்தியும் உள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கேஎல் ராகுல் அபாரமாக ஆடியிருக்கிறார். ஆனால் ஒரு அணியாக அந்த அணி வீரர்கள் இணைந்து சிறப்பாக ஆடாததால் வெற்றி பெறமுடியவில்லை.

கேஎல் ராகுல் சிறப்பான ஆட்டம்:

பஞ்சாப் கிங்ஸ் அணியை கடந்த சில சீசன்களாக ஒரு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் தனி ஒருவனாக தூக்கி நிறுத்திய கேஎல் ராகுல், தற்போது செம ஃபார்மில் ஆடிவருகிறார். கடந்த சீசனில் 626 ரன்களை குவித்தார். கடந்த சீசனில் அதிக ரன்களை குவித்த ருதுராஜ் கெய்க்வாட்டை விட வெறும் 9 ரன்களே ராகுல் குறைவாக அடித்திருந்தார். 

அதற்கு முந்தைய ஐபிஎல் 13வது சீசனில்(2020) 670 ரன்களை குவித்த ராகுல் தான் ஆரஞ்சு கேப்பை வென்றார். அதற்கு முந்தைய 2019 சீசனில் 593 ரன்களை குவித்து, வார்னருக்கு அடுத்து அதிக ரன்களை குவித்த வீரராக திகழ்ந்தார் ராகுல். இப்படியாக கடந்த சில சீசன்களாகவே டாப் 3 ரன் ஸ்கோரர்களில் ஒருவராக ராகுல் திகழ்ந்துவருகிறார். சர்வதேச கிரிக்கெட்டிலும் மிகச்சிறப்பாக ஆடிவருகிறார்.

பஞ்சாப் அணியிலிருந்து வெளியேறிய கேஎல் ராகுல்:

இவ்வாறு மிகச்சிறப்பாக ஆடிவந்த கேஎல் ராகுல், ஐபிஎல் 15வது சீசன் மெகா ஏலத்திற்கு முன்பாக பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து விலகினார். இதையடுத்து அவரை ரூ.17 கோடிக்கு ஒப்பந்தம் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, அவரை கேப்டனாகவும் நியமித்தது.

கேஎல் ராகுல் விளக்கம்:

ஐபிஎல் 15வது சீசன் வரும் 26ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பஞ்சாப் அணியிலிருந்து வெளியேறியது குறித்து பேசிய கேஎல் ராகுல், 4 ஆண்டுகள் பஞ்சாப் அணிக்காக ஆடினேன். அது சிறந்த அனுபவம். வேறு அணிக்காக ஆட விரும்பினேன்; அவ்வளவுதான். பஞ்சாப் அணியிலிருந்து வெளியேறியது கண்டிப்பாக கடினமான முடிவுதான் என்று ராகுல் தெரிவித்தார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!