IPL 2021 #DCvsKKR 2வது தகுதிச்சுற்று போட்டி டாஸ் ரிப்போர்ட்! டெல்லி கேபிடள்ஸ் அணியில் எதிர்பார்த்த ஒரு மாற்றம்

Published : Oct 13, 2021, 07:14 PM IST
IPL 2021 #DCvsKKR 2வது தகுதிச்சுற்று போட்டி டாஸ் ரிப்போர்ட்! டெல்லி கேபிடள்ஸ் அணியில் எதிர்பார்த்த ஒரு மாற்றம்

சுருக்கம்

டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான 2வது தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

ஐபிஎல் 14வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. சிஎஸ்கே அணி ஃபைனலுக்கு முன்னேறிவிட்ட நிலையில், 2வது ஃபைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் 2வது தகுதிச்சுற்று போட்டி  இன்று ஷார்ஜாவில் நடக்கிறது. 

டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் மோதும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி கேப்டன் ஒயின் மோர்கன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். கேகேஆர் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டிகளில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் ஆடுகிறது.

கேகேஆர் அணி:

ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, ஒயின் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), ஷகிப் அல் ஹசன், சுனில் நரைன், ஷிவம் மாவி, லாக்கி ஃபெர்குசன், வருண் சக்கரவர்த்தி.

டெல்லி கேபிடள்ஸ் அணியில் எதிர்பார்த்தபடியே டாம் கரன் நீக்கப்பட்டு, மார்கஸ் ஸ்டோய்னிஸ்  சேர்க்கப்பட்டுள்ளார். ஸ்டோய்னிஸ் சேர்க்கப்பட்டது டெல்லி அணியின் பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்தியுள்ளது.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்ஸர் படேல், அஷ்வின், ரபாடா, நோர்க்யா, ஆவேஷ் கான்.
 

PREV
click me!

Recommended Stories

Harmanpreet Kaur Net Worth: கோடிகளை குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர்! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?
KL Rahul: இந்தியாவின் நியூ ரன் மெஷின்.. ஒரே சதத்தில் பல சாதனைகளை தகர்த்த கே.எல்.ராகுல்!