IPL 2021 பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான முக்கியமான போட்டியில் களமிறங்கும் கேகேஆர் அணியின் உத்தேச ஆடும் லெவன்

Published : Sep 30, 2021, 09:51 PM IST
IPL 2021 பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான முக்கியமான போட்டியில் களமிறங்கும் கேகேஆர் அணியின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் கேகேஆர் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 14வது சீசன் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்கிறது. லீக் சுற்று முடியவுள்ள நிலையில், சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 2 அணிகளும் கிட்டத்தட்ட பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்டன. ஆர்சிபி அணியும் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும்.

4வது அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேறுவதற்கு கேகேஆர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளும் இருந்தாலும், கேகேஆர் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், நாளை முக்கியமான போட்டியில் பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்கிறது கேகேஆர் அணி. வெற்றி கட்டாயத்துடன் கேகேஆர் ஆடும் இந்த போட்டியில் களமிறங்கும் அந்த அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

கேகேஆர் அணியில் ஆண்ட்ரே ரசல் இந்த போட்டியிலும் ஆட வாய்ப்பில்லை என்பதால், அந்த அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படுவதற்கான வாய்ப்பில்லை. அதனால் கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் அந்த அணி களமிறங்கும்.

உத்தேச கேகேஆர் அணி:

ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, ஒயின் மோர்கன்(கேப்டன்), நிதிஷ் ராணா,  தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், டிம் சௌதி, லாக்கி ஃபெர்குசன், சந்தீப் வாரியர், வருண் சக்கரவர்த்தி.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ T20: பேட்டிங் ஸ்டைலை மாற்றுகிறாரா சூர்யகுமார்?.. அவரே சொன்ன அதிரடி பதில்!
IND VS NZ முதல் டி20.. ஷ்ரேயாஸ் ஐயர் இடத்துக்கு 'ஆப்பு' வைத்த இளம் வீரர்.. பிளேயிங் லெவன்!