ஐபிஎல் 2020: கேஎல் ராகுல் தலைமையில் களமிறங்கும் பஞ்சாப்பின் லெவன் கிங்ஸ் இவங்கதான்

By karthikeyan VFirst Published Mar 7, 2020, 1:30 PM IST
Highlights

ஐபிஎல் 13வது சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் களமிறங்கி ஆட வாய்ப்புள்ள 11 உத்தேச வீரர்களை கொண்ட அணியை பார்ப்போம். 
 

ஐபிஎல்லில் 12 சீசன்கள் நடந்து முடிந்த நிலையில், இதுவரை ஒருமுறை கூட டைட்டிலை வெல்லாத அணிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் ஒன்று. எனவே இந்த சீசனில் கண்டிப்பாக டைட்டிலை வெல்லும் முனைப்பில் உள்ளது பஞ்சாப் அணி. 

கோப்பையை எதிர்நோக்கியிருக்கும் பஞ்சாப் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக மைக் ஹெசன் நியமிக்கப்பட்டிருக்கிறார். 13வது சீசனில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2 சீசன்களாக அந்த அணியின் கேப்டனாக இருந்து செயல்பட்ட அஷ்வினை கேப்டன்சியிலிருந்து மட்டுமல்லாமல் அணியிலிருந்தே தூக்கியது பஞ்சாப் அணி. புதிய கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கெய்லும் ராகுலும் இறங்குவார்கள். அதற்கடுத்த வரிசையில் மயன்க் அகர்வால், நிகோலஸ் பூரான், சர்ஃபராஸ் கான் ஆகியோர் இறங்குவார்கள். இந்த சீசனில் அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி. எனவே அவர் மிடில் ஆர்டரில் வலு சேர்ப்பார். ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டராக கிருஷ்ணப்பா கௌதம் ஆடுவார். இளம் ஸ்பின்னர்கள் ரவி பிஷ்னோய் அல்லது முருகன் அஷ்வின் ஆகிய இருவரில் ஒருவர் ஸ்பின்னராக ஆடுவார். 

ஆடும் லெவனில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் தான் ஆடமுடியும். கெய்ல், பூரான், மேக்ஸ்வெல் ஆகிய மூவரும் இடம்பெறுவார்கள் என்பதால் எஞ்சிய ஒரு இடத்தில் ஷெல்டான் கோட்ரெல் அல்லது முஜீபுர் ரஹ்மான் இறங்குவார். நிகோலஸ் பூரான் அணியில் இடம்பெறவில்லை என்றால், கோட்ரெல் மற்றும் முஜீபுர் ஆகிய இருவருமே ஆடுவார்கள். மேலும் ஃபாஸ்ட் பவுலர்களாக முகமது ஷமி மற்றும் வளர்ந்து வரும் இளம் ஃபாஸ்ட் பவுலர் இஷான் போரெல் ஆகியோர் ஆடுவார்கள். 

எதிரணி மற்றும் ஆடுகளத்தின் தன்மை, அணியின் காம்பினேஷனுக்கான தேவை ஆகியவற்றை கருத்தில்கொண்டு வெளிநாட்டு வீரர்கள் தேர்வு இருக்கும். எனவே ஒன்றிரண்டு மாற்றங்கள் செய்யப்படலாமே தவிர, இதுதான் பெரும்பாலும் களமிறங்கும் அணியாக இருக்கும்.

Also Read - அடிச்சா சிக்ஸர் மட்டும்தான்.. இலங்கையை கங்கனம் கட்டி அடித்த ஆண்ட்ரே ரசல்.. டி20 தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் உத்தேச அணி:

கிறிஸ் கெய்ல், கேஎல் ராகுல், மயன்க் அகர்வால், சர்ஃபராஸ் கான், நிகோலஸ் பூரான், க்ளென் மேக்ஸ்வெல், கிருஷ்ணப்பா கௌதம், ரவி பிஷ்னோய்/முருகன் அஷ்வின், ஷெல்டான் கோட்ரெல்/முஜீபுர் ரஹ்மான், முகமது ஷமி, இஷான் போரெல். 

click me!