அடிச்சா சிக்ஸர் மட்டும்தான்.. இலங்கையை கங்கனம் கட்டி அடித்த ஆண்ட்ரே ரசல்.. டி20 தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்

By karthikeyan VFirst Published Mar 7, 2020, 12:22 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆண்ட்ரே ரசலின் அதிரடியான பேட்டிங்கால் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, 2-0 என டி20 தொடரை வென்றது.
 

வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. ஒருநாள் தொடரை இலங்கை அணி வென்ற நிலையில், 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றுள்ளது. 

முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி, 20 ஓவரில் 158 ரன்கள் அடித்தது. 159 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் சிம்மன்ஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான பிரண்டன் கிங் அதிரடியாக ஆடி 21 பந்தில் 42 ரன்கள் அடித்தார். 

இலக்கு ரொம்ப கடினமானது இல்லை என்பதால், ஹெட்மயர் அவசரப்படாமல் ஆடினார். ரோமன் பவல் 17 பந்தில் 17 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஹெட்மயருடன் ஜோடி சேர்ந்த ரசல், வெற்றிக்காக நீண்டநேரம் காத்திருக்க விரும்பவில்லை. களத்திற்கு வந்தது முதலே சிக்ஸர்களை விளாசி இலங்கையை பதற்றமாக்கினார். 

வெறும் சிக்ஸர்களாக விளாசிய ரசல் 14 பந்தில் 6 சிக்ஸர்களுடன் 40 ரன்களை விளாசி 17வது ஓவரிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி இலக்கை எட்ட உதவினார். ரசல் அடித்த 40 ரன்களில் 36 ரன்கள் சிக்ஸர் மூலம் கிடைத்தவை. வெறும் நான்கே சிங்கிள் மட்டுமே எடுத்தார். காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள ரசல், தனது உடற்தகுதியையும் ஃபார்மையும் நிரூபிக்கும் விதமாக கடந்த போட்டியில் 14 பந்தில்ம் 35 ரன்களையும் இந்த போட்டியில் 14 பந்தில் 40 ரன்களையும் விளாசி மிரட்டினார். 

Also Read - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணியில் 2 வீரர்கள் சர்ப்ரைஸ் தேர்வு..?

இந்த வெற்றியை அடுத்து 2-0 என வெஸ்ட் இண்டீஸ் அணி, இலங்கையை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.

click me!