தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணியில் 2 வீரர்கள் சர்ப்ரைஸ் தேர்வு..?

By karthikeyan VFirst Published Mar 7, 2020, 11:53 AM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் 2 சர்ப்ரைஸ் தேர்வு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடவுள்ளது. வரும் 12, 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில் முறையே தர்மசாலா, லக்னோ மற்றும் கொல்கத்தாவில் மூன்று ஒருநாள் போட்டிகள் நடக்கவுள்ளன. 

இந்த தொடருக்கான இந்திய அணியில், உள்நாட்டு போட்டிகளிலும் இந்தியா ஏ அணியிலும் சிறப்பாக ஆடியிருக்கக்கூடிய 3 வீரர்களுக்கு வாய்ப்பளிகப்பட வாய்ப்புள்ளது. 

1. சூர்யகுமார் யாதவ்

இளம் வீரரான சூர்யகுமார் யாதவ், கடந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக ஆடினார். அதன்பின்னர் விஜய் ஹசாரே, தியோதர் டிராபி, சையத் முஷ்டாக் அலி தொடர் ஆகியவற்றில் அபாரமாக ஆடி ஸ்கோர் செய்தார். நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான இந்தியா ஏ அணியிலும் இடம்பிடித்து ஆடினார். குறிப்பாக, டி20 உள்நாட்டு தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் அருமையாக பேட்டிங் ஆடினார். டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்கும் முனைப்பில் டி20 போட்டிகளில் தொடர்ந்து அசத்திவரும் சூர்யகுமார் யாதவ், ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக ஆடியுள்ளார். விராட் கோலிக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்படலாம் என கூறப்படுவதால், கோலி ஆடாத பட்சத்தில் சூர்யகுமாருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

 

2. ஜெய்தேவ் உனாத்கத்

ஏற்கனவே இந்திய அணிக்காக ஆடிய இடது கை ஃபாஸ்ட் பவுலரான ஜெய்தேவ் உனாத்கத், அப்படியே காலப்போக்கில் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். இப்போது எந்தவிதமான போட்டியிலும் இந்திய அணிக்காக அவர் ஆடவில்லை. இந்நிலையில் நடப்பு ரஞ்சி தொடரில், சவுராஷ்டிரா அணியின் கேப்டனாக செயல்பட்ட உனாத்கத், பவுலராகவும் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு, சவுராஷ்டிரா அணியை இறுதி போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். 

இறுதி போட்டி மட்டும் எஞ்சியுள்ள நிலையில், அரையிறுதி வரை 65 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் உனாத்கத். இதன்மூலம் ஒரு ரஞ்சி சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஃபாஸ்ட் பவுலர் என்ற சாதனையை படைத்துள்ள உனாத்கத், இறுதி போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால், ஒரு ரஞ்சி சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையையும் படைத்துவிடுவார். 

Also Read - நான் டெல்லி கேபிடள்ஸ் அணிக்காக ஆடமாட்டேன்.. ஐபிஎல்லில் இருந்து அதிரடியாக விலகிய இங்கிலாந்து வீரர்

உள்நாட்டு போட்டிகளில் அபாரமாக பந்துவீசியுள்ள உனாத்கத்திற்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. பும்ராவும் காயத்திற்கு பிறகு, பெரியளவில் ஃபார்மில் இல்லாத சூழலில், உனாத்கத் இந்திய அணியின் பவுலிங் யூனிட்டிற்கு வலுசேர்ப்பார். அதுமட்டுமல்லாமல் இந்திய அணியில் இடது கை பந்துவீச்சாளரும் இல்லை. பும்ரா, ஷமி, நவ்தீப் சைனி, உமேஷ் யாதவ் என அனைவருமே வலது கை ஃபாஸ்ட் பவுலர்கள் என்பதால், இடது கை ஃபாஸ்ட் பவுலருக்கான தேவையும் உனாத்கத்திற்கான வாய்ப்பை உறுதி செய்கிறது. இடது கை ஃபாஸ்ட் பவுலராக இந்திய அணியில் எடுக்கப்பட்ட இளம் கலீல் அகமது தொடர்ந்து சொதப்பியதால் அணியிலிருந்து தூக்கியெறியப்பட்டார். எனவே இடது கை ஃபாஸ்ட் பவுலருக்கான தேவை இந்திய அணியில் இருப்பதால் உனாத்கத் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. 

Also Read - இவ்வளவு வெறித்தனமா ஒருவர் பேட்டிங் ஆடி பார்த்துருக்க மாட்டீங்க.. ஹர்திக்கின் வேற லெவல் பேட்டிங்.. வீடியோ
 

click me!