ENG vs IND: பும்ரா செய்த முட்டாள்தனம் தான் இந்தியாவின் பின்னடைவுக்கு காரணம்..! கெவின் பீட்டர்சன் கடும் விளாசல்

By karthikeyan VFirst Published Jul 5, 2022, 3:04 PM IST
Highlights

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் இந்திய அணியின் கேப்டன் பும்ராவின் முட்டாள்தனமான கேப்டன்சி தான் இந்திய அணியின் பின்னடைவுக்கு காரணம் என்று கெவின் பீட்டர்சன் விளாசியுள்ளார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரிஷப் பண்ட் (146) மற்றும் ரவீந்திர ஜடேஜா (104) ஆகிய இருவரின் அபார சதங்களால் முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, பேர்ஸ்டோவின் அபாரமான சதத்தால்(106) முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் அடித்தது.

132 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் புஜாரா (66) மற்றும் ரிஷப் பண்ட்(57) ஆகிய இருவர் மட்டுமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். மற்ற வீரர்கள் சோபிக்காததால் 2வது இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியா. இந்திய அணி மொத்தமாக 377 ரன்கள் முன்னிலை பெற, 378 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்தது.

இதையும் படிங்க - டெஸ்ட் கிரிக்கெட்டில் லக்‌ஷ்மண், கம்பீர் ஆகிய ஜாம்பவான்களை அசால்ட்டா தூக்கியடித்து ரிஷப் பண்ட் அபார சாதனை

378 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அலெக்ஸ் லீஸ் மற்றும் ஜாக் க்ராவ்லி ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு லீஸும் க்ராவ்லியும் இணைந்து 107 ரன்களை குவித்தனர். க்ராவ்லி 46 ரன்களும், அரைசதம் அடித்த லீஸ் 56 ரன்களும் அடித்தனர். ஆலி போப் ரன்னே அடிக்காமல் ஆட்டமிழந்தார். 107 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணி, 109 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

அதனால் இந்திய அணிக்கு நம்பிக்கை வந்தது. ஆனால் அதன்பின்னர் ஜானி பேர்ஸ்டோவும் ஜோ ரூட்டும் இணைந்து அடித்து ஆடி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். இருவருமே அரைசதம் அடித்தனர். 4ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்களை குவித்தது. ரூட்76 ரன்களுடனும், பேர்ஸ்டோ 72 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க - ENG vs IND: டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன் இதுதான்..!

இங்கிலாந்து அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், இந்த போட்டியில் இந்திய அணியின் பின்னடைவுக்கு பும்ராவின் மோசமான கேப்டன்சி தான் காரணம் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய பீட்டர்சன், ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டன்சியில் தவறிழைத்துவிட்டார். ரிவர்ஸ் ஸ்விங் இங்கிலாந்தில் பலனளிக்காது. ஆனால் பும்ரா ரிவர்ஸ் ஸ்விங்காக வீசி முட்டாள்தனம் செய்துவிட்டார். ரிவர்ஸ் ஸ்விங் வீசினால் நான் - ஸ்டிரைக்கர் திசையில் அடித்துவிடலாம். அதைத்தான் இங்கிலாந்து வீரர்கள் செய்தனர். ஃபீல்டிங் செட்டப்பும் தவறு. ரிவர்ஸ் ஸ்விங் வீசும்போது மிட் ஆஃப் மற்றும் மிட் ஆன் திசையில் ஃபீல்டர்களை நிறுத்தி முடிந்தால் தலைக்கு மேல் தூக்கி அடி என்று சவால் விடுத்திருந்தால் விக்கெட் விழுந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் ஃபீல்டர்களை லாங் ஆன், லாங் ஆஃப் திசைகளில் நிறுத்தி தவறு செய்துவிட்டார் என்று பீட்டர்சன் விமர்சித்துள்ளார்.
 

click me!