IPL 2023: ஆர்சிபியிலிருந்து விலகும் விராட் கோலி..? எந்த அணியில் இணைகிறார் தெரியுமா..?

By karthikeyan V  |  First Published May 22, 2023, 7:40 PM IST

ஆர்சிபியிலிருந்து விலகி விராட் கோலி டெல்லி கேபிடள்ஸ் அணியில் சேர வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கெவின் பீட்டர்சன் கருத்து கூறியுள்ளார்.
 


சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து புதிய மைல்கற்களை செட் செய்துவருகிறார்.  சர்வதேச 75 சதங்களை விளாசி, சச்சின் டெண்டுல்கரின் 100 சத சாதனையை விரட்டிவருகிறார். சச்சின் சாதனையை கோலி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விராட் கோலி ஐபிஎல்லிலும் பேட்டிங்கில் பல சாதனைகளை படைத்துவருகிறார். பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டு ஆர்சிபிக்காக மிகச்சிறந்த பங்களிப்பை கோலி வழங்கினாலும், ஆர்சிபியால் ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாதது வருத்தம்தான்.

Tap to resize

Latest Videos

ICC ODI தரவரிசையில் பாக்., வீரர்கள் ஆதிக்கம்..! கோலி, ரோஹித்தை பின்னுக்குத் தள்ளிய அயர்லாந்து வீரர்

ஐபிஎல் தொடங்கியதிலிருந்து ஒரே  அணிக்காக ஆடிவரும் ஒரே வீரர் என்ற தனித்துவமான சாதனைக்கு சொந்தக்காரர் விராட் கோலி. ஐபிஎல் 16வது சீசனிலும் வழக்கம்போலவே முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது ஆர்சிபி அணி. ஆனால் இந்த சீசனிலும் பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் வெளியேறியது. இந்த சீசனிலும் ஏமாற்றமடைந்த ஆர்சிபி அணி, ரசிகர்களையும் ஏமாற்றியது.

லீக் சுற்றின் கடைசி 2 போட்டிகளிலும் சதமடித்து ஐபிஎல்லில் 7 சதங்களுடன், அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். விராட் கோலி ஐபிஎல்லில் ஆர்சிபிக்காக 237 போட்டிகளில் ஆடி 7 சதங்களுடன் 7263 ரன்களை குவித்துள்ளார். ஆனால் அந்த அணி ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை.

ஆர்சிபி அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை என்றாலும், ஆர்சிபி அணியின் ரசிகர்கள் மற்றும் விராட் கோலியின் ரசிகர்களும் அந்த அணியையும் கோலியையும் விட்டுக்கொடுப்பதில்லை. ஒவ்வொரு சீசனிலும் ஃப்ரெஷ்ஷாக கோலி மீதும் ஆர்சிபி மீதும் நம்பிக்கை வைத்து ஆதரவளித்துவருகின்றனர். ஆர்சிபி ரசிகர்களின் ஆதரவால் நெகிழ்ந்துபோன விராட் கோலி, ஐபிஎல்லில் கடைசிவரை ஆர்சிபி அணிக்காக மட்டுமே ஆடுவேன் என்றும், வேறு அணிக்காக ஆடுவதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது என்றும் கோலி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

IPL 2023: ஐபிஎல்லில் அசத்திய இந்த 3 வீரர்களையும் ODI உலக கோப்பைக்கான இந்திய அணியில் எடுக்கணும் - ரவி சாஸ்திரி

இந்த சீசனிலும் ஆர்சிபி அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், அவர் டெல்லி கேபிடள்ஸ் அணிக்காக ஆட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

டெல்லி கேபிடள்ஸும் ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. விராட் கோலியின் சொந்த ஊர் டெல்லி தான் என்ற நிலையில், அவர் டெல்லிக்காக ஆட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
 

click me!