ஆஸ்திரேலிய முன்னாள் ஃபாஸ்ட் பவுலரின் ஆல்டைம் பெஸ்ட் லெவன்.. 4 இந்திய வீரர்களுக்கு இடம்

By karthikeyan VFirst Published Oct 6, 2019, 2:41 PM IST
Highlights

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் மைக்கேல் காஸ்ப்ரோவிக்ஸ் தனது ஆல்டைம் சிறந்த டெஸ்ட் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். 
 

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட முன்னாள் வீரர்கள், தங்களது பார்வையில் ஆல்டைம் சிறந்த வீரர்களை தேர்வு செய்வார்கள். அந்தவகையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் மைக்கேல் காஸ்ப்ரோவிக்ஸ் தனது ஆல்டைம் சிறந்த டெஸ்ட் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். 

டெஸ்ட் அணியின் ஆல்டைம் சிறந்த தொடக்க வீரர்களாக இந்திய அணியின் அதிரடி வீரர் சேவாக்கையும் இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் அலெஸ்டர் குக்கையும் தேர்வு செய்துள்ளார். மூன்றாம் வரிசை வீரராக இந்திய அணியின் சுவர் என அழைக்கப்படும் தலைசிறந்த வீரரான ராகுல் டிராவிட்டை தேர்வு செய்துள்ளார். 

நான்கு மற்றும் ஐந்தாம் வரிசை வீரர்களாக உலகின் ஆல்டைம் சிறந்த வீரர்களான பிரயன் லாரா மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் காஸ்ப்ரோவிக்ஸ். ஆல்ரவுண்டர்களாக ஆண்ட்ரூ ஃபிளிண்டாஃப் மற்றும் வாசிம் அக்ரம் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். 

ஸ்பின் பவுலராக அனில் கும்ப்ளேவையும் ஃபாஸ்ட் பவுலர்களாக வெஸ்ட் இண்டீஸ் லெஜண்டுகளான கர்ட்லி ஆம்ப்ரூஸ் மற்றும் குர்ட்னி வால்ஷ் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் காஸ்ப்ரோவிக்ஸ். 

ஆஸ்திரேலிய அணியின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவரான காஸ்ப்ரோவிக்ஸ், சர்வதேச கிரிக்கெட்டில் நீண்டகாலம் ஆடவில்லை. ஆனாலும் ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு ஒத்துழைப்பே தராத, இந்தியா உள்ளிட்ட துணைக்கண்ட நாடுகளின் ஆடுகளங்களில் நன்றாக ஸ்விங் செய்து வீசக்கூடியவர் காஸ்ப்ரோவிக்ஸ். ரிவர்ஸ் ஸ்விங்கும் அருமையாக செய்வார். காஸ்ப்ரோவிக்ஸ், அவரது ஆல்டைம் சிறந்த டெஸ்ட் அணியில் 4 இந்திய வீரர்களை தேர்வு செய்துள்ள நிலையில், சொந்த நாட்டு வீரர் ஒருவரை கூட தேர்வு செய்யவில்லை. 

காஸ்ப்ரோவிக்ஸ் தேர்வு செய்த ஆல்டைம் பெஸ்ட் டெஸ்ட் அணி:

வீரேந்திர சேவாக், அலெஸ்டர் குக், ராகுல் டிராவிட், பிரயன் லாரா, சச்சின் டெண்டுல்கர், ஆண்ட்ரூ ஃபிளிண்டாஃப், பிரண்டன் மெக்கல்லம்(விக்கெட் கீப்பர்), வாசிம் அக்ரம், அனில் கும்ப்ளே, கர்ட்லி ஆம்ப்ரூஸ், குர்ட்னி வால்ஷ்.
 

click me!