ஜித்தனுக்குலாம் ஜித்தன் வந்தே தீருவான்.. இப்படிலாம் நடக்கும்னு நான் நெனச்சுகூட பார்த்தது இல்ல.. மனசுல உள்ளதை அப்படியே பேசிய கபில் தேவ்

By karthikeyan VFirst Published Sep 13, 2019, 1:06 PM IST
Highlights

கிரிக்கெட் மட்டுமல்ல எந்த விளையாட்டாக இருந்தாலும் சரி அல்லது எந்த துறையாக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும் இவர் தான் அல்டிமேட் என்று உறுதி செய்துவிடமுடியாது. அடுத்தடுத்த காலக்கட்டங்களில் அதைவிட சிறந்த வீரர்கள் உருவாகிக்கொண்டே தான் இருப்பார்கள். 
 

கிரிக்கெட் மட்டுமல்ல எந்த விளையாட்டாக இருந்தாலும் சரி அல்லது எந்த துறையாக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும் இவர் தான் அல்டிமேட் என்று உறுதி செய்துவிடமுடியாது. அடுத்தடுத்த காலக்கட்டங்களில் அதைவிட சிறந்த வீரர்கள் உருவாகிக்கொண்டே தான் இருப்பார்கள். 

கிரிக்கெட்டிலும் அப்படித்தான்.. எந்த காலத்திலும் எந்த வீரரையும் இவர் தான் ஆல்டைம் பெஸ்ட் என்று சொல்லிவிடமுடியாது. எவ்வளவு பெரிய ரெக்கார்டும் முறியடிக்கப்படும். அப்படித்தான் சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் ரெக்கார்டு. 

சர்வதேச கிரிக்கெட்டில்(டெஸ்ட், ஒருநாள் சேர்த்து) 100 சதங்களுடன் 34 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்து, டான் பிராட்மேனுக்கு அடுத்து கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். சச்சினின் பேட்டிங் சாதனைகளை எல்லாம் முறியடிக்கவே முடியாது என்று பேசப்பட்ட காலமெல்லாம் முடிந்துவிட்டது. 

விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். சச்சின் டெண்டுல்கர் உட்பட மற்ற பேட்டிங் ரெக்கார்டுகளையும் முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிவருகிறார் கோலி. குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் கோலியின் பேட்டிங் அபாரம். தொடர்ச்சியாக ரன்களை குவித்துவருகிறார். அவரது கெரியர் முடிவதற்குள் சச்சின் டெண்டுல்கரின் ரெக்கார்டுகளை காலி செய்துவிடுவார். 

இந்நிலையில், டெல்லி கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு ஃபெரோஷ் ஷா கோட்லாவின் பெயர் நீக்கப்பட்டு அருண் ஜேட்லியின் பெயர் சூட்டப்பட்டது. அதேபோல, ஒரு ஸ்டேடியத்தின் ஒரு ஸ்டாண்டிற்கு விராட் கோலியின் பெயர் சூட்டப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்ட கபில் தேவ், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது கோலி குறித்து பேசிய கபில் தேவ்,கோலி இன்னும் நீண்டதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. கோலி இந்திய கிரிக்கெட்டுக்கு அளித்துள்ள பங்களிப்பு அளப்பரியது. சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை எல்லாம் ஒருவர் நெருங்கிவிடுவார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. சச்சின் தான் அல்டிமேட் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில்,, கோலி வேற லெவலில் ஆடிவருகிறார் என்று கபில் தேவ் புகழாரம் சூட்டினார். 
 

click me!