டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து வெளியேற்றம் – கேப்டன் பதவியை ராஜினாமா செய்த வில்லியம்சன்!

By Rsiva kumar  |  First Published Jun 19, 2024, 12:45 PM IST

டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து குரூப் சுற்று போட்டிகளுடன் நியூசிலாந்து வெளியேறியதைத் தொடர்ந்து கேன் வில்லியம்சன் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரானது, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், குரூப் சுற்று போட்டிகள் முடிந்து இன்று சூப்பர் 8 சுற்று போட்டிகள் தொடங்க இருக்கிறது. இதில் நியூசிலாந்து விளையாடிய 4 போட்டிகளில் 2ல் தோல்வியும், 2ல் வெற்றியும் பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து 10 முறை ஐசிசி தொடர்களில் விளையாடி 7 முறை மட்டுமே அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஒரு முறை கூட இறுதிப் போட்டிக்கு வரவில்லை. இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த கேன் வில்லியம்சன் ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

Tap to resize

Latest Videos

undefined

இதைத் தொடர்ந்து, நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இவரது தலைமையிலான நியூசிலாந்து அணி 4 போட்டிகளில் விளையாடியது. இதில், ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டிஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தோல்வியை தழுவியது. உகாண்டா மற்றும் பப்புவா நியூ கினி அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்து டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.

இந்த நிலையில் 2024 – 25 ஆம் ஆண்டுக்கான நியூசிலாந்து அணியின் மத்திய ஒப்பந்தத்தை கேன் வில்லியம்சன் நிராகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன்சி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்ட வீரர்களுக்கு மட்டுமே அணியில் இடம் அளிக்கப்படும்.

கேப்டன் பதவியை ராஜினாமா செய்தது குறித்து பேசிய கேன் வில்லியம்சன் கூறியிருப்பதாவது: எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவை எடுத்தேன். இனி வரும் போட்டிகளில் தொடர்ந்து பங்களிப்பேன். வெளிநாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளிலும் விளையாட முடிவு செய்திருக்கிறேன். என்னால் மத்திய ஒப்பந்தத்தை ஏற்க முடியாது. கிரிக்கெட்டை கடந்து குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதும் முக்கியமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

click me!