ஐபிஎல்லில் ஆட கூப்பிட மாட்டாங்களானு ஃபோனை கையில் வச்சுகிட்டே உட்கார்ந்திருக்கோம்.. ஆஸி., வீரர் ஓபன் டாக்

By karthikeyan VFirst Published Mar 17, 2020, 4:55 PM IST
Highlights

ஐபிஎல்லில் ஆட அழைப்பு வந்துவிடாதா என்ற எதிர்பார்ப்பில் ஃபோனை வைத்துக்கொண்டு காத்திருப்பதாக ஆஸ்திரேலிய வீரர் கேன் ரிச்சர்ட்ஸன் தெரிவித்துள்ளார். 
 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுதும் வேகமாக பரவி சர்வதேசத்தையே அச்சுறுத்திவருகிறது. உலகம் முழுதும் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா அச்சுறுத்தலின் விளைவாக கிரிக்கெட் தொடர்கள் அனைத்துமே ஒத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டு தென்னாப்பிரிக்க வீரர்கள் பாதுகாப்பாக சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 

பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஆடிய இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் அவருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக ஆஸ்திரேலிய வீரர் கேன் ரிச்சர்ட்ஸன் மற்றும் நியூசிலாந்து வீரர் ஃபெர்குசன் ஆகியோருக்கும் கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டது. ஆனால் பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்தது. 

இந்நிலையில், ஐபிஎல் தொடர் தொடங்குகிறது.. ஆட வாங்க என்ற அழைப்பு வந்துவிடாதா என்ற எதிர்பார்ப்பில், ஃபோனை கையில் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதாக கேன் ரிச்சர்ட்ஸன் தெரிவித்துள்ளார். 

Also Read - இங்கிலாந்தின் அதிரடி பேட்ஸ்மேனுக்கு கொரோனா அறிகுறிகள்.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்

இதுகுறித்து பேசியுள்ள கேன் ரிச்சர்ட்ஸன், ஐபிஎல் ரத்தாகப்போகிறது என்றெல்லாம் பேசப்படுகிறது. ஆனால் எப்போது வேண்டுமானால் என்ன வேண்டுமானால் நடக்கலாம். ஒரு நாளிலோ அல்லது ஒரு வாரத்திலோ சூழல் மொத்தமாக மாறக்கூடும். நாங்கள் தென்னாப்பிரிக்காவில் ஆடும்போது எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அங்கிருந்து ஆஸ்திரேலியாவிற்கு திரும்பியதும் கொரோனா ஹாட் டாபிக்காக மாறியது. அதேபோல சில தினங்களில் என்ன மாற்றம் வேண்டுமானாலும் நடக்கும். ஐபிஎல்லில் ஆட வாருங்கள் என்ற அழைப்பிற்காக ஃபோனை கையில் வைத்து காத்திருக்கிறோம் என்று கேன் ரிச்சர்ட்ஸன் தெரிவித்துள்ளார். 
 

click me!