பாபர் அசாமிடம் படிச்சு படிச்சு சொன்னேன்; அவரு கேட்கல! இவ்ளோ சீக்கிரம் கெடுத்துட்டாங்க- முன்னாள் வீரர் வருத்தம்

By karthikeyan VFirst Published Sep 16, 2022, 5:07 PM IST
Highlights

பாபர் அசாமிடம் கேப்டன்சியை அவரது கெரியரின் பிற்பாதியில் ஏற்குமாறு வலியுறுத்தியபோதிலும், அவர் அதை கேட்காமல் தனது கெரியரின் ஆரம்பத்திலேயே கேப்டன்சியை ஏற்று அழுத்தத்திற்கு ஆளானதாக காம்ரான் அக்மல் கருத்து கூறியுள்ளார்.
 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம். சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோர் வரிசையில் பாபர் அசாமும் தலைசிறந்த வீரராக மதிப்பிடப்படுகிறார்.

ஆனால் கேப்டன்சி அழுத்தத்தால் அவரது பேட்டிங்கும், பேட்டிங் சரியாக ஆடமுடியாத பாபர் அசாமின் கேப்டன்சியும் என இரண்டுமே பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - ஐபிஎல்: மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு புதிய தலைமை பயிற்சியாளர்கள் நியமனம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வலுவான அணியாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டி மற்றும் இறுதிப்போட்டி ஆகிய 2 போட்டிகளிலும் இலங்கையிடம் தோற்றது பாகிஸ்தான் அணி. ஃபைனலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் கேப்டன்சி படுமோசமாக இருந்தது. 58 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இலங்கை அணி இழந்த நிலையில், ஆட்டம் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் பாபர் அசாமின் கேப்டன்சி சொதப்பலால் இலங்கையிடம் தோற்றது பாகிஸ்தான் அணி.

உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நுழைந்த பாபர் அசாம், ஆசிய கோப்பையில் 10, 9, 14, 0, 30, 5 ரன்கள் என படுமோசமாக சொதப்பினார். அதன்விளைவாக, ஆசிய கோப்பை முடியும்போது டி20 தரவரிசையில் முதலிடத்திலிருந்து மூன்றாம் இடத்திற்கு பின் தங்கினார்.

பாபர் அசாம் கேப்டன்சி அழுத்தத்தால் பேட்டிங்கி சொதப்பிவரும் நிலையில், அவரிடம் கேப்டன்சி சீக்கிரமாக ஒப்படைக்கப்பட்டு அவரது பேட்டிங்கை சீரழித்துவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார் முன்னாள் வீரர் காம்ரான் அக்மல்.

இதையும் படிங்க - INDA vs NZA: சஞ்சு சாம்சன் கேப்டன்சியில் இந்திய அணி அறிவிப்பு

இதுகுறித்து பேசியுள்ள காம்ரான் அக்மல், ஃபைசலாபாத்தில் நடந்த டி20 போட்டியில் டாஸ் போட பாபர் அசாம் வந்தபோதுதான் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்ட விஷயம் அறிந்தேன். அப்போதே நான் பாபரிடம் சொன்னேன்.. கேப்டன்சியை ஏற்க இது சரியான நேரம் அல்ல. இன்னும் 2-3 ஆண்டுகள் சிறப்பாக பேட்டிங் ஆடினால் பாகிஸ்தான் பேட்டிங் ஆர்டரே உன்னை(பாபரை) சார்ந்துதான் இருக்கும். விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் லெவலுக்கு செல். 35-40 சதங்களை அடித்தபின் கேப்டன்சியை ஏற்றால் கேப்டன்சியை என்ஜாய் செய்யலாம் என்றேன். ஆனால் விரைவில் கேப்டன்சியை ஏற்றது அவரது முடிவு. அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்லி அவர் கேப்டன்சியை ஏற்பதென்று முடிவெடுத்திருக்கலாம் என்றார் காம்ரான் அக்மல்.
 

click me!