ஜூனைத் கான் தேர்வு செய்த ஆல்டைம் பாகிஸ்தான் டி20 லெவன்..! டி20 கிரிக்கெட்டில் ஆடிராத வீரருக்கும் இடம்

Published : May 16, 2021, 05:19 PM IST
ஜூனைத் கான் தேர்வு செய்த ஆல்டைம் பாகிஸ்தான் டி20 லெவன்..! டி20 கிரிக்கெட்டில் ஆடிராத வீரருக்கும் இடம்

சுருக்கம்

பாகிஸ்தான் அணியின் ஃபாஸ்ட் பவுலர் ஜூனைத் கான் ஆல்டைம் பாகிஸ்தான் டி20 லெவனை தேர்வு செய்துள்ளார்.  

பாகிஸ்தான் அணியின் தரமான ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் இடது கை ஃபாஸ்ட் பவுலர் ஜூனைத் கான். பாகிஸ்தான் கிரிக்கெட்டின் மோசமான அரசியலால் ஓரங்கட்டப்பட்ட வீரர்களில் ஒருவரான ஜூனைத் கான், ஆல்டைம் டி20 பாகிஸ்தான் லெவனை தேர்வு செய்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் எல்லா காலத்திலும் சிறந்த டி20 அணியின் தொடக்க வீரர்களாக பாபர் அசாம் மற்றும் சயீத் அன்வர் ஆகிய இருவரையும் ஜூனைத் கான் தேர்வு செய்துள்ளார். சயீத் அன்வர் டி20 கிரிக்கெட்டில் ஆடியதே இல்லை. ஆனாலும் டி20க்கு ஏற்ற அதிரடி பேட்ஸ்மேனான சயீத் அன்வரை ஆல்டைம் டி20 பாகிஸ்தான் லெவனின் தொடக்க வீரராக தேர்வு செய்துள்ளார் ஜூனைத் கான்.

3 மற்றும் 4ம் வரிசைகளில் முறையே பாகிஸ்தான் அணியின் மிக மிக சீனியர் வீரர்களான முகமது ஹஃபீஸ் மற்றும் ஷோயப் மாலிக் ஆகிய இருவரையும் தேர்வு செய்த ஜூனைத் கான், விக்கெட் கீப்பராக தற்போதைய விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானை தேர்வு செய்துள்ளார்.

உமர் அக்மல் மற்றும் ஷாகித் அஃப்ரிடி ஆகிய இருவரையும் தனது அணியில் எடுத்துள்ள ஜூனைத் கான், ஸ்பின்னராக சயீத் அஜ்மலையும் ஃபாஸ்ட் பவுலர்களாக உமர் குல், ஷோயப் அக்தர் மற்றும் சொஹைல் தன்வீர் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார்.

ஜூனைத் கான் தேர்வு செய்த ஆல்டைம் டி20 பாகிஸ்தான் லெவன்:

பாபர் அசாம், சயீத் அன்வர், முகமது ஹஃபீஸ், ஷோயப் மாலிக், உமர் அக்மல், ஷாகித் அஃப்ரிடி, சயீத் அஜ்மல், உமர் குல், அக்தர், சொஹைல் தன்வீர்.

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!