ஜோஸ் பட்லரின் ஆல்டைம் ஐபிஎல் லெவன்..! கெய்ல், ரெய்னா ஆகிய பெருந்தலைகளுக்கே இடம் இல்ல

Published : May 16, 2021, 03:05 PM IST
ஜோஸ் பட்லரின் ஆல்டைம் ஐபிஎல் லெவன்..! கெய்ல், ரெய்னா ஆகிய பெருந்தலைகளுக்கே இடம் இல்ல

சுருக்கம்

ஜோஸ் பட்லர் தேர்வு செய்த ஐபிஎல்லின் ஆல்டைம் பெஸ்ட் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 14வது சீசன் கொரோனா பெருந்தொற்று காரணமாக பாதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், எஞ்சிய போட்டிகளை செப்டம்பரில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

ஐபிஎல்லில் 13 சீசன்கள் வெற்றிகரமாக நடந்துள்ள நிலையில், ஐபிஎல்லின் ஆல்டைம் பெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடும் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர்.

தான் தேர்வு செய்த ஆல்டைம் ஐபிஎல் லெவனின் தொடக்க வீரராக ரோஹித் சர்மாவை தேர்வு செய்துள்ள பட்லர், அவரது ஓபனிங் பார்ட்னராக தன்னைத்தானே தேர்வு செய்துள்ளார். 3ம் வரிசையில் கோலி, 4ம் வரிசையில் டிவில்லியர்ஸ், விக்கெட் கீப்பராக தோனி ஆகியோரை தேர்வு செய்தார் பட்லர்.

ஆல்ரவுண்டர்களாக பொல்லார்டு மற்றும் ஜடேஜா ஆகிய இருவரையும் ஸ்பின்னராக ஹர்பஜன் சிங்கையும், ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், பும்ரா, மலிங்கா ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார் பட்லர்.

ஐபிஎல்லின் வெற்றிகரமான வீரர்களான கிறிஸ் கெய்ல், சுரேஷ் ரெய்னா ஆகிய இருவரையும் இந்த அணியில் எடுக்காமல் புறக்கணித்துள்ளார் பட்லர்.

ஜோஸ் பட்லரின் ஆல்டைம் ஐபிஎல் லெவன்:

ஜோஸ் பட்லர், ரோஹித் சர்மா, விராட் கோலி, டிவில்லியர்ஸ், தோனி(விக்கெட் கீப்பர்), பொல்லார்டு, ஜடேஜா, ஹர்பஜன் சிங், புவனேஷ்வர் குமார், பும்ரா, மலிங்கா.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!