தோனி இல்லாத ஐபிஎல் டீம்.. கேப்டன் படுமொக்கை.. அதிர்ச்சிகர தேர்வு

By karthikeyan VFirst Published May 28, 2020, 7:22 PM IST
Highlights

தென்னாப்பிரிக்க வீரர் ஜேபி டுமினி, ஆல்டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்துள்ளார். 
 

தென்னாப்பிரிக்க அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஜேபி டுமினி. தென்னாப்பிரிக்க அணியில் 2004ம் ஆண்டு அறிமுகமான டுமினி, அந்த அணியின் மிடில் ஆர்டரில் நட்சத்திர வீரராக ஜொலித்தார். தென்னாப்பிரிக்க அணிக்காக 46 டெஸ்ட், 199 ஒருநாள் மற்றும் 81 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார் டுமினி. 

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகளில் ஆடியுள்ளார் டுமினி. கடைசியாக 2018 ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். கடந்த சீசனில் அவர் ஆடவில்லை. 

இந்நிலையில், ஐபிஎல்லில் ஆல்டைம் லெவனை தேர்வு செய்துள்ளார் டுமினி. அதன்படி, தனது ஆல்டைம் ஐபிஎல் லெவனின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்ல் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகிய இருவரையும் டுமினி தேர்வு செய்துள்ளார். கெய்ல் ஐபிஎல்லின் வெற்றிகரமான பேட்ஸ்மேன். ஐபிஎல்லில் அதிக சிக்ஸர்கள்(326 சிக்ஸர்கள்), ஒரு இன்னிங்ஸில் அதிகமான ரன்(175*) என பல சாதனைகளை தன்னகத்தே கொண்டவர் கெய்ல். ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட், டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்காக ஆடியிருக்கிறார். அவரது தலைமையில் 2009ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. 

மூன்றாம் வரிசை வீரராக ரோஹித் சர்மாவையும் நான்காம் வரிசை வீரராக விராட் கோலியையும் தேர்வு செய்துள்ள டுமினி, தனது லெவனில் தோனியை தேர்வு செய்யவில்லை. ஐபிஎல்லின் பெஸ்ட் ஃபினிஷர்களில் ஒருவரும் சிஎஸ்கேவிற்கு 3 முறை கோப்பையை வென்றூகொடுத்தவருமான தோனியை தனது லெவனில் டுமினி எடுக்கவில்லை. மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, மும்பை இந்தியன்ஸுக்கு 4 முறை ஐபிஎல் டைட்டிலை வென்று கொடுத்த ரோஹித்தை கேப்டனாக தேர்வு செய்யாமல், ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியாமல் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கும் விராட் கோலியை தனது ஆல்டைம் ஐபிஎல் லெவனின் கேப்டனாக தேர்வு செய்துள்ளார். 

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ஐந்தாம் வரிசையில் டிவில்லியர்ஸை தேர்வு செய்துள்ள டுமினி, ஆல்ரவுண்டர்களாக பொல்லார்டு மற்றும் ஆண்ட்ரே ரசல் ஆகிய இருவரையும் ஸ்பின்னர்களாக முத்தையா முரளிதரன் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகிய இருவரையும், ஃபாஸ்ட் பவுலர்களாக பிரெட் லீ மற்றும் லசித் மலிங்கா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். 

ஜேபி டுமினி தேர்வு செய்த ஆல்டைம் ஐபிஎல் லெவன்:

கிறிஸ் கெய்ல், ஆடம் கில்கிறிஸ்ட், ரோஹித் சர்மா, விராட் கோலி(கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ், பொல்லார்டு, ஆண்ட்ரே ரசல், பிரெட் லீ, முத்தையா முரளிதரன், லசித் மலிங்கா, இம்ரான் தாஹிர்.
 

click me!