MI vs RR: ஜோஸ் பட்லர் அதிரடி சதம்.. ஹெட்மயர் காட்டடி! MI-க்கு சவாலான இலக்கை நிர்ணயித்த RR

Published : Apr 02, 2022, 05:28 PM IST
MI vs RR: ஜோஸ் பட்லர் அதிரடி சதம்.. ஹெட்மயர் காட்டடி! MI-க்கு சவாலான இலக்கை நிர்ணயித்த RR

சுருக்கம்

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 193 ரன்கள் அடித்து 194 ரன்கள் என்ற சவாலான இலக்கை மும்பை அணிக்கு நிர்ணயித்துள்ளது.  

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் ராஜஸ்தான் ராயல்ஸும் ஆடிவருகின்றன. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அன்மோல்ப்ரீத் சிங், திலக் வர்மா, கைரன் பொல்லார்டு, டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், முருகன் அஷ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா, டைமல் மில்ஸ், பாசில் தம்பி.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், டிரெண்ட் போல்ட், நவ்தீப் சைனி, பிரசித் கிருஷ்ணா.

முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு ரன்னில் பும்ராவின் பந்தில் ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய மற்றொரு இளம் வீரரான தேவ்தத் படிக்கல் 7 ரன்னில் டைமல் மில்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார். 

அதிரடியாக ஆடிய ஜோஸ் பட்லருடன் கேப்டன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். அதிரடியாக ஆடிய பட்லர் அரைசதம் அடிக்க, சாம்சன் 21 பந்தில் 30 ரன் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பட்லருடன் ஜோடி சேர்ந்த ஹெட்மயர் காட்டடி அடித்தார். 14 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 35 ரன்கள் அடித்து ஹெட்மயர் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய பட்லர் சதமடித்தார். சதமடித்த பட்லர் 68 பந்தில் 100 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 

பட்லர், சாம்சன், ஹெட்மயர் ஆகிய மூவரும் அதிரடியாக ஆடியபோதிலும், பட்லர் சதத்தை நெருங்கிய போது சில பந்துகளை வீணடித்து மெதுவாக ஆடியதாலும், மற்ற வீரர்கள் யாரும் சோபிக்காததாலும், 20 ஓவரில் 193 ரன்கள் மட்டுமே அடித்தது ராஜஸ்தான் அணி. அந்த அணி ஆடிய வேகத்திற்கு இன்னும் பெரிய ஸ்கோரை அடித்திருக்கக்கூடும். பும்ரா கட்டுக்கோப்பாக பந்துவீசியதுடன் முக்கியமான விக்கெட்டுகளையும் வீழ்த்தியதால் 20 ஓவரில் ராஜஸ்தானை 193 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது மும்பை அணி. 

194 ரன்கள் என்பது மும்பை அணிக்கு சவாலான இலக்குதான் என்றாலும், அடிக்கக்கூடிய இலக்குதான்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Sakib Hussain Net Worth: முதல் மேட்ச்லயே 4 விக்கெட்! யார் இந்த சகிப் ஹுசைன்? சொத்து மதிப்பு எவ்வளவு?
Sakib Hussain: 'ஷூ வாங்க காசு இல்ல'னு அழுத மகன்.. நகையை விற்ற தாய்! SRH வீரரின் பகீர் பின்னணி..