
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று சனிக்கிழமை என்பதால் 2 போட்டிகள் நடக்கின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்துவரும் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் ராஜஸ்தான் ராயல்ஸும் ஆடிவருகின்றன.
இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸும் மோதுகின்றன. இந்த 2 அணிகளுமே அவை ஆடிய முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், வெற்றியை தொடரும் முனைப்பில் இன்றைய போட்டியில் களமிறங்குகின்றன.
புனேவில் நடக்கும் இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
உத்தேச குஜராத் டைட்டன்ஸ் அணி:
ஷுப்மன் கில், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், அபினவ் மனோகர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், லாக்கி ஃபெர்குசன், வருண் ஆரோன் , முகமது ஷமி.
உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:
பிரித்வி ஷா, டிம் சேஃபெர்ட், மந்தீப் சிங், ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், கலீல் அகமது, குல்தீப் யாதவ், கமலேஷ் நாகர்கோட்டி.