SA20: பேட்டிங்கில் பட்லர்.. பவுலிங்கில் பட்டைய கிளப்பிய ஆர்ச்சர்..! பார்ல் ராயல்ஸை சுருட்டிய எம்.ஐ கேப்டவுன்

By karthikeyan V  |  First Published Jan 10, 2023, 11:09 PM IST

தென்னாப்பிரிக்கா டி20 லீக்கில் எம்.ஐ கேப்டன் அணிக்கு எதிரான முதல் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பார்ல் ராயல்ஸ் அணி, 20 ஓவரில் 142 ரன்கள் அடித்து, 143 ரன்கள் என்ற இலக்கை எம்.ஐ கேப்டவுக்கு நிர்ணயித்துள்ளது.
 


தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடர் இன்று தொடங்கியது. இன்று (ஜனவரி 10) முதல் பிப்ரவரி 11 வரை தென்னாப்பிரிக்காவில் இந்த டி20 லீக் தொடர் நடக்கிறது. இன்று கேப்டவுனில் நடந்துவரும் முதல் போட்டியில் ரஷீத் கான் தலைமையிலான எம்.ஐ கேப்டவுன் அணியும், டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணியும் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டவுன் கேப்டன் ரஷீத் கான் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

எம்.ஐ கேப்டவுன் அணி:

Tap to resize

Latest Videos

undefined

ராசி வாண்டர்டசன், கிராண்ட் ராயலோஃப்சென் (விக்கெட் கீப்பர்), டிவால்ட் பிரெவிஸ், ரியான் ரிக்கெல்டன், டெலானோ பாட்ஜியடெர், ஜார்ஜ் லிண்டே, சாம் கரன், ரஷீத் கான் (கேப்டன்), டுவான் யான்சென், ஆலி ஸ்டோன், ஜோஃப்ரா ஆர்ச்சர்.

IND vs SL: தசுன் ஷனாகாவின் போராட்ட சதம் வீண்..! முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

பார்ல் ராயல்ஸ் அணி:

ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), விஹான் லுப்பே, இயன் மோர்கன், டேவிட் மில்லர் (கேப்டன்), டேன் விலாஸ், ஃபெரிஸ்கோ ஆடம்ஸ், ஃபார்ச்சூன், ரமான் சிம்மண்ட்ஸ், கோடி யூசுஃப், டப்ரைஸ் ஷம்ஸி.

முதலில் பேட்டிங் ஆடிய பார்ல் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர், டேவிட் மில்லர், இயன் மோர்கன் ஆகிய மிகப்பெரிய வீரர்கள் அணியில் இருந்தும் கூட, அந்த அணியால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம், கேப்டவுன் அணியின் மிரட்டல் ஃபாஸ்ட் பவுலரான ஜோஃப்ரா ஆர்ச்சர்.

பார்ல் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் அரைசதம் அடித்தார். ஆனால் அவரது வழக்கமான அதிரடி பேட்டிங்கை ஆடவில்லை. 42 பந்தில் 51 ரன்கள் மட்டுமே அடித்தார். ஜேசன் ராய் 13 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார். கேப்டன் டேவிட் மில்லர் 31 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 42 ரன்கள் அடித்து அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். பட்லர், மில்லர், ஜேசன் ராய், மோர்கன் ஆகிய மிகப்பெரிய வீரர்கள் அணியில் இருந்தும் கூட பார்ல் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 142 ரன்கள் மட்டுமே அடித்தது.

இந்திய அணியின் கதவை ஓங்கி தட்டும் பிரித்வி ஷா..! ரஞ்சி போட்டியில் ஒரே நாளில் 240 ரன்களை குவித்து சாதனை

அபாரமாக பந்துவீசி 4 ஓவரில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்டை வீழ்த்தி ராயல்ஸ் அணியை ஸ்கோர் செய்யவிடாமல் தடுத்தார் ஜோஃப்ரா ஆர்ச்சர். 143 ரன்கள் என்ற இலக்கை கேப்டவுன் அணி விரட்டிவருகிறது.
 

click me!