இங்கிலாந்தின் வெற்றிகரமான கேப்டன் ஜோ ரூட்..! இந்தியாவுக்கு எதிரான வெற்றியால் அபார சாதனை

Published : Feb 09, 2021, 11:49 PM IST
இங்கிலாந்தின் வெற்றிகரமான கேப்டன் ஜோ ரூட்..! இந்தியாவுக்கு எதிரான வெற்றியால் அபார சாதனை

சுருக்கம்

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதையடுத்து, இங்கிலாந்தின் வெற்றிகரமான கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார்.  

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதையடுத்து, இங்கிலாந்தின் வெற்றிகரமான கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையே சென்னையில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் கேப்டன்சியில் பெறும் 26வது டெஸ்ட் வெற்றி.

இதன்மூலம் இங்கிலாந்தின் வெற்றிகரமான கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார் ஜோ ரூட். 47 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியை வழிநடத்தியுள்ள ஜோ ரூட், அதில் 26 வெற்றிகளை பெற்றுள்ளார். இதன்மூலம் இங்கிலாந்துக்காக அதிக டெஸ்ட் வெற்றிகள் என்ற மைக்கேல் வானின் சாதனையை சமன்செய்துள்ளார் ஜோ ரூட். 

51 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியை வழிநடத்தியுள்ள மைக்கேல் வான் 26 வெற்றிகளை பெற்றுள்ளார். ஆனால் ஜோ ரூட், 47 போட்டிகளிலேயே 26 வெற்றிகள் என்ற மைல்கல்லை எட்டிவிட்டார். இவர்களுக்கு அடுத்த இடத்தில் 24 டெஸ்ட் வெற்றிகளுடன் அலெஸ்டர் குக் உள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அந்த ஒரு தோல்வி மனசே உடைஞ்சு போச்சு.. உலகக்கோப்பை தோல்வி குறித்து மனம் திறந்த ரோகித்
முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!