#ENGvsIND இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் வெற்றி.. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அபார சாதனை

Published : Aug 28, 2021, 09:20 PM IST
#ENGvsIND இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் வெற்றி.. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அபார சாதனை

சுருக்கம்

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்துக்காக அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார் ஜோ ரூட்.  

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழும் ஜோ ரூட், இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்தியாவுக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் 3 சதங்கள் அடித்து, இங்கிலாந்து அணியின் மாபெரும் சக்தியாகவும், ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவராகவும் திகழ்ந்துவருகிறார்.

இங்கிலாந்தின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக மட்டுமல்லாது, இங்கிலாந்தின் சிறந்த கேப்டனாகவும் திகழ்கிறார். சிறந்த கேப்டனிலிருந்து இங்கிலாந்தின் வெற்றிகரமான கேப்டனாகவும் உருவெடுத்துள்ளார் ஜோ ரூட்.

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி அடைந்த வெற்றி, ஜோ ரூட்டின் கேப்டன்சியில் பெற்ற 27வது டெஸ்ட் வெற்றி. இதன்மூலம் இங்கிலாந்துக்கு அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த வெற்றிகரமான கேப்டன்  என்ற சாதனையை ரூட் படைத்துள்ளார்.

ரூட் இதுவரை 55 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியை வழிநடத்தி 27 போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்துள்ளார். மைக்கேல் வான் 51 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தை வழிநடத்தி 26 வெற்றிகளையும், ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 50 டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தி 24 வெற்றிகளையும் பெற்று கொடுத்துள்ளனர்.
 

PREV
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?