ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா நியமனம்..!

By karthikeyan VFirst Published Jan 30, 2021, 7:52 PM IST
Highlights

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
 

பிசிசிஐ செயலாளராக உள்ளார் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா. மிகச்சிறந்த நிர்வாகியான சவுரவ் கங்குலியின் தலைமையின் கீழ் பிசிசிஐயின் செயலாளராக செயல்பட்டுவருகிறார் ஜெய் ஷா.

கங்குலி நெஞ்சுவலியால் கொல்கத்தாவில் மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், உள்நாட்டு தொடர்களான சையத் முஷ்டாக் அலி தொடரை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதிலும், அடுத்ததாக விஜய் ஹசாரே தொடரை நடத்துவதிலும் முழு கவனம் செலுத்தி தீவிரமாக செயல்பட்டுவருகிறார் ஜெய் ஷா.

இந்நிலையில், அவர் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 24 உறுப்பு நாடுகளை கொண்ட ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருந்த வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹுசைனின் பதவிக்காலம் முடிந்ததையொட்டி, புதிய தலைவராக ஜெய் ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெய் ஷாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிசிசிஐ பொருளாளர் அருண் சிங் துமால், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள் ஜெய் ஷா. உங்கள் தலைமையின் கீழ் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிறைய சாதனைகளை செய்வதுடன், ஆசிய பிராந்தியத்தை சேர்ந்த அனைத்து கிரிக்கெட் வீரர்களும் பயனடைவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் என்று ஜெய் ஷாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அருண் சிங் துமால்.
 

click me!