#BBL ஜேம்ஸ் வின்ஸின் சூப்பர் பேட்டிங்கால் பெர்த் ஸ்கார்ச்சர்ஸை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறிய சிட்னி சிக்ஸர்ஸ்

Published : Jan 30, 2021, 06:12 PM IST
#BBL ஜேம்ஸ் வின்ஸின் சூப்பர் பேட்டிங்கால் பெர்த் ஸ்கார்ச்சர்ஸை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறிய சிட்னி சிக்ஸர்ஸ்

சுருக்கம்

பிக்பேஷ் லீக்கின் தகுதிச்சுற்று போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது சிட்னி சிக்ஸர்ஸ் அணி.  

பிக்பேஷ் லீக் தொடரின் தகுதிச்சுற்று போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஸ்கார்ச்சர்ஸ் அணி, ஜோஷ் இங்லிஷின் அதிரடி அரைசதம்(41 பந்தில் 69 ரன்கள்) மற்றும் கேப்டன் அஷ்டன் டர்னரின் கடைசி நேர அதிரடியால் 20 ஓவரில் 167 ரன்கள் அடித்தது.

168 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் ஜோஷ் ஃபிலிப் இணைந்து சிறப்பாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 92 ரன்களை குவித்தனர். 28 பந்தில் 45 ரன்கள் அடித்து ஃபிலிப் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ஜேம்ஸ் வின்ஸ், அரைசதத்திற்கு பின்னரும் அதிரடியை தொடர்ந்து, கடைசி வரை களத்தில் நின்று சிக்ஸர்ஸ் அணியை வெற்றி பெற செய்தார்.

அதிரடியாக ஆடிய வின்ஸ் 53 பந்தில் 14 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 98 ரன்களை குவித்து, 17 ஓவரிலேயே சிக்ஸர்ஸ் அணியை வெற்றி பெற செய்தார். கடைசி வரை களத்தில் இருந்தும்கூட, 2 ரன்னில் சதத்தை தவறவிட்டார் வின்ஸ். இதையடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறியது.
 

PREV
click me!

Recommended Stories

உள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
WTC புள்ளிப்பட்டியலில் இந்திய அணி பரிதாபம்..! முதலிடம், இரண்டாம் இடம் எந்த அணி?