#INDvsENG டி20, ஒருநாள் தொடர்களில் அவர் ஆடமாட்டார்..! மேட்ச் வின்னருக்கு ரெஸ்ட்; ரசிகர்களுக்கு அதிர்ச்சி

Published : Feb 16, 2021, 11:26 PM IST
#INDvsENG டி20, ஒருநாள் தொடர்களில் அவர் ஆடமாட்டார்..! மேட்ச் வின்னருக்கு ரெஸ்ட்; ரசிகர்களுக்கு அதிர்ச்சி

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்திய அணியின் நட்சத்திர வீரரும் மேட்ச் வின்னருமான பும்ராவிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.   

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட்டில் ஆடிய பும்ராவிற்கு 2வது டெஸ்ட்டில் ஓய்வளிக்கப்பட்டது. அகமதாபாத்தில் நடக்கும் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக பும்ராவிற்கு 2வது டெஸ்ட்டில் ஓய்வளிக்கப்பட்டது.

வரும் 24ம் தேதி தொடங்கும் பிங்க் பந்து டெஸ்ட்டிலும், அதற்கடுத்த கடைசி டெஸ்ட்டிலும் ஆடும் பும்ராவிற்கு அதன்பின்னர் நடக்கும் 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் தொடங்கி, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரை சுமார் 180 ஓவர்கள் வீசியுள்ள பும்ரா, கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடவுள்ளார். அவர் வீசிய ஓவர்களின் எண்ணிக்கை, களத்தில் நின்ற நேரம் ஆகியவற்றையும் அவரது ஃபிட்னெஸையும் கருத்தில்கொண்டு அவருக்கு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் ஓய்வளிக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்லில் அடைந்த காயத்திற்கு பிறகு கிரிக்கெட்டே ஆடிராத புவனேஷ்வர் குமார், காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள ஷமி,நடராஜன், சைனி ஆகிய ஃபாஸ்ட் பவுலர்கள் இந்திய அணியில் இடம்பெற்று வெள்ளைப்பந்து போட்டிகளில் ஆடுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு
T20 உலகக்கோப்பை 2026: இந்திய அணி அறிவிப்பு.. சஞ்சு இன், கில் அவுட்.. BCCI அதிரடி