பும்ராவின் முதுகுவலி.. இந்தியாவிற்கு தலைவலி..! நியூசி., & ஆஸி., தொடரிலிருந்தும் விலகுகிறார் பும்ரா

By karthikeyan VFirst Published Jan 10, 2023, 4:07 PM IST
Highlights

ஜஸ்ப்ரித் பும்ரா முதுகுவலி காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடமாட்டார் என்று தெரிகிறது.
 

இந்திய அணி இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கவுள்ள ஒருநாள் உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவருகிறது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோற்று வெளியேறியது இந்திய அணி.

டி20 உலக கோப்பையில் ஜஸ்ப்ரித் பும்ரா ஆடாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. தோல்விக்கு அவர் ஆடாததும் ஒரு காரணம். முதுகுவலி காரணமாக டி20 உலக கோப்பையில் ஆடாத ஜஸ்ப்ரித் பும்ரா, அதிலிருந்து மீண்டதால் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் முதுகுவலி சரியாகாததால் அந்த தொடரிலிருந்து விலகினார்.

என் கிரிக்கெட் கெரியரில் என்னை அச்சுறுத்திய 2பவுலர்கள் இவங்கதான்; ஒருவர் இந்தியர்! ஃபாஃப் டுப்ளெசிஸ் ஓபன் டாக்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர், ஆசிய கோப்பை, ஒருநாள் உலக கோப்பை என இந்த ஆண்டு மிகப்பெரிய தொடர்களில் ஆடவுள்ளதால், அந்த தொடர்களில் பும்ரா ஆட ஃபிட்னெஸுடன் இருப்பது அவசியம் என்பதை மனதில்வைத்து இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து நீக்கப்பட்டார் பும்ரா.

இந்நிலையில், அடுத்ததாக இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக ஆடவுள்ள ஒருநாள் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளில் ஆடமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பும்ரா எப்போது முழு ஃபிட்னெஸை அடைகிறார் என்று அவர் நினைக்கிறாரோ, அப்போது பிசிசிஐக்கு தகவல் தெரிவித்து இந்திய அணியில் இணையலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விவியன், சச்சின், ஏபிடி-னு எத்தனையோ பேரை பார்த்துருக்கேன்! சூர்யகுமார் மாதிரி வீரரை பார்த்ததில்ல - கபில் தேவ்

பும்ராவின் தீராத முதுகுவலி இந்திய அணிக்கு தலைவலியாக அமைந்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறுவதற்கு, ஆஸ்திரேலியா தொடர் இந்திய அணிக்கு முக்கியமானது. அதில் பும்ரா ஆடவில்லை என்றால் அது இந்திய அணிக்கு பின்னடைவாக அமையும்.
 

click me!