India vs Sri Lanka:இந்தியமண்ணில் பும்ராவின் முதல் 5 விக்கெட் ஹால்! 109 ரன்னில் இலங்கையை பொட்டளம்கட்டிய இந்தியா

Published : Mar 13, 2022, 02:45 PM ISTUpdated : Mar 13, 2022, 02:51 PM IST
India vs Sri Lanka:இந்தியமண்ணில் பும்ராவின் முதல் 5 விக்கெட் ஹால்! 109 ரன்னில் இலங்கையை பொட்டளம்கட்டிய இந்தியா

சுருக்கம்

2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 252 ரன்கள் அடித்த இந்திய அணி, இலங்கையை வெறும் 109 ரன்களுக்கு சுருட்டியது.  

இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக பெங்களூருவில் நடந்துவருகிறது. 

பகலிரவு டெஸ்ட்:

நேற்று(மார்ச் 12) தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மயன்க் அகர்வால் (4) மற்றும் ரோஹித் சர்மா (15) ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஹனுமா விஹாரி 31 ரன்னிலும், விராட் கோலி 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 39 ரன்னில் ஆட்டமிழந்தார். 

இதையும் படிங்க - IPL 2022: டெல்லி கேபிடள்ஸ் அணியின் புதிய ஜெர்சி வெளியீடு..!

அதன்பின்னர் ஜடேஜா(4), அஷ்வின் (13), அக்ஸர் படேல் (9), ஷமி (5) என ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் 98 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 92 ரன்களை குவித்த ஷ்ரேயாஸ் ஐயர் 8 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.

பும்ரா அபாரம்:

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, இந்திய ஸ்பின்னர்களிடம் தான் சரணடையும் என பார்த்தால், ஃபாஸ்ட் பவுலர்களிடம் விக்கெட்டுகளை இழந்தது. இலங்கை ஸ்பின்னர்கள் பந்துவீசும்போது பெரியளவில் தாக்கம் இருந்தது. எனவே இந்திய ஸ்பின்னர்களிடம் இலங்கை வீரர்கள் வீழ்ந்துவிடுவார்கள் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பும்ராவும் ஷமியும் சேர்ந்து அசத்தினர். 3வது ஓவரின் முதல் பந்தில் தொடக்க வீரர் குசால் மெண்டிஸை 2 ரன்னிலும், 5வது ஓவரின் முதல் பந்தில் திரிமன்னேவை 8 ரன்னிலும் வீழ்த்தினார் பும்ரா.

ஆறாவது ஓவரில் கேப்டனும் மற்றொரு தொடக்க வீரருமான கருணரத்னேவை 4 ரன்னில் ஷமி வெளியேற்றினார். தனஞ்செயா டி சில்வாவையும் 10 ரன்னில் ஷமியே வீழ்த்தினார். அசலங்காவை 5 ரன்னில் அக்ஸர் படேல் வீழ்த்த, மறுமுனையில் அடித்து ஆடி 43 ரன்களை விளாசிய சீனியர் வீரர் ஆஞ்சலோ மேத்யூஸை 43 ரன்னில் பும்ரா வீழ்த்தினார்.

இதையும் படிங்க - Faf du Plessis: ஆர்சிபி அணியின் கேப்டனாக ஃபாஃப் டுப்ளெசிஸ் நியமனம்

6 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் அடித்திருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது. 2ம் நாளான இன்றைய ஆட்டத்தை டிக்வெல்லாவும் எம்பல்டேனியாவும் தொடர்ந்த நிலையில் எம்பல்டேனியா(1) மற்றும் டிக்வெல்லா (21) ஆகிய இருவரையும் பும்ரா வீழ்த்த, லக்மல் (5) மற்றும் விஷ்வா ஃபெர்னாண்டோ (8) ஆகிய இருவரையும் அஷ்வின் வீழ்த்த 109 ரன்களுக்கு சுருண்டது இலங்கை அணி.

பும்ரா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இந்திய மண்ணில் முதல் முறையாக பும்ரா ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தினார். 143 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது.  
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!