BAN vs ENG: ஜேசன் ராய் அபார சதம்.. ஒருநாள் கிரிக்கெட்டில் 3ம் இடம் பிடித்து சாதனை

Published : Mar 03, 2023, 05:50 PM IST
BAN vs ENG: ஜேசன் ராய் அபார சதம்.. ஒருநாள் கிரிக்கெட்டில் 3ம் இடம் பிடித்து சாதனை

சுருக்கம்

வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடிய ஜேசன் ராய் சதமடித்து, 12 சதங்களுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில் 3ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.  

இங்கிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஃபிலிப் சால்ட், டேவிட் மலான், ஜேம்ஸ் வின்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), வில் ஜாக்ஸ், மொயின் அலி, சாம் கரன், அடில் ரஷீத், சாகிப் மஹ்மூத், மார்க் உட்.

நானும் எத்தனையோ பிளேயர்ஸுக்கு பந்துவீசியிருக்கேன்! புஜாரா மாதிரி ஒரு வீரரை பார்த்ததில்ல - நேதன் லயன் புகழாரம்

வங்கதேச அணி:

தமிம் இக்பால் (கேப்டன்), லிட்டன் தாஸ், நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, முஷ்ஃபிகுர் ரஹிம் (விக்கெட் கீப்பர்), ஷகிப் அல் ஹசன், மஹ்மதுல்லா, அஃபிஃப் ஹுசைன், மெஹிடி ஹசன் மிராஸ், டஸ்கின் அகமது, டைஜூல் இஸ்லாம், முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியில் சால்ட்(7), டேவிட் மலான்(11), ஜேம்ஸ் வின்ஸ்(5) ஆகியோர் ஒருமுனையில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் தொடக்க வீரர் ஜேசன் ராய் நிலைத்து நின்று அடித்து ஆடினார். அவருடன் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோஸ் பட்லர் சிறப்பாக பேட்டிங் ஆடினார். ராய் - பட்லர் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 109 ரன்களை குவித்தனர்.

அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்த ஜேசன் ராய் 132 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். பட்லர் 76 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் சாம் கரன் மற்றும் மொயின் அலி ஆகிய இருவரும் அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்தனர். மொயின் அலி 35 பந்தில் 42 ரன்கள் அடித்தார். சாம் கரன் 19 பந்தில் 33 ரன்கள் அடிக்க, 50 ஓவரில் 326 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி. 327 ரன்கள் என்ற கடினமான இலக்கை வங்கதேசம் விரட்டிவருகிறது.

ICC WTC: இந்தியாவை வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா..! இந்திய அணிக்கு சிக்கல்

அபாரமாக ஆடி சதமடித்த ஜேசன் ராய்க்கு ஒருநாள் கிரிக்கெட்டில் இது 12வது சதமாகும். 115 ஒருநாள் போட்டிகளில் ஆடி 12 சதங்கள் அடித்துள்ளார் ஜேசன் ராய். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் 3ம் இடத்தை மார்கஸ் டிரெஸ்கோதிக்குடன் பகிர்ந்துள்ளார் ஜேசன் ராய். இந்த பட்டியலில் 16 சதங்களுடன் ஜோ ரூட் முதலிடத்திலும், 13 சதங்களுடன் மோர்கன் 2ம் இடத்திலும் உள்ளனர். 3ம் இடத்தில் இருக்கும் ஜேசன் ராய் இன்னும் ஒரு சதமடித்தால் 2ம் இடத்தை மோர்கனுடன் பகிர்வார். மோர்கன் ஒய்வு பெற்றுவிட்டதால் இன்னும் 2 சதங்கள் அடித்தால் 2ம் இடத்திற்கு முன்னேறிவிடுவார்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA 1st T20: கம்பேக் மேட்ச்சில் காட்டடி அடித்த ஹர்திக் பாண்ட்யா.. SA-க்கு சவாலான இலக்கு!
IND vs SA 1st T20: இந்தியா பேட்டிங்..! சஞ்சு சாம்சன், நம்பர் 1 ஸ்பின்னர் நீக்கம்! பிளேயிங் லெவன்!