ஐபிஎல் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்டது பெரிய அசிங்கம்..! அதிரடி வீரர் வருத்தம்

By karthikeyan VFirst Published Feb 19, 2021, 11:11 PM IST
Highlights

ஐபிஎல் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்டது பெரிய அசிங்கம் என்று தெரிவித்துள்ளார் இங்கிலாந்து டாப் ஆர்டர் அதிரடி பேட்ஸ்மேன் ஜேசன் ராய்.
 

ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் நேற்று சென்னையில் நடந்தது. இந்த ஏலம் முழுக்க முழுக்க ஃபாஸ்ட் பவுலர்களுக்கான ஏலமாக அமைந்தது. ஃபாஸ்ட் பவுலர்களுக்கான கிராக்கி அதிகமாக இருந்ததால், கிறிஸ் மோரிஸ்(ரூ.16.25 கோடி), கைல் ஜாமிசன்(ரூ.15 கோடி), ஜெய் ரிச்சர்ட்ஸன்(ரூ.14 கோடி), மெரிடித்(ரூ.8 கோடி) ஆகியோர் அதிக விலைக்கு ஏலம்போனார்கள்.

இந்த ஏலத்தில் தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அதிகபட்சமாக ரூ.16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் எடுக்கப்பட்டார். ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு விலைபோன வீரர் என்ற சாதனையை படைத்தார் கிறிஸ் மோரிஸ். 

மோரிஸ், ஜாமிசன், ஜெய் ரிச்சர்ட்ஸன், மேக்ஸ்வெல் எல்லாம் அதிகமான தொகைக்கு ஏலம்போன அதேவேளையில், ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஆரோன் ஃபின்ச், மார்டின் கப்டில், காலின் முன்ரோ ஆகிய அதிரடி வீரர்களை எந்த அணியும் எடுக்க முன்வராததால், அவர்களெல்லாம் விலைபோகவில்லை. 

இந்நிலையில், ஐபிஎல் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்டது பெரிய அசிங்கம் என இங்கிலாந்து அதிரடி வீரர் ஜேசன் ராய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்ட டுவீட்டில், ஐபிஎல்லில் ஆடமுடியாமல் போனது பெரிய அசிங்கம். ஆனால் அதேவேளையில், ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஜேசன் ராய் தெரிவித்துள்ளார்.
 

click me!