என் மீது(ம்) நம்பிக்கை வைத்து அணியில் எடுத்த அனைவருக்கும் நன்றி - MI ஆல்ரவுண்டர் அர்ஜுன் டெண்டுல்கர்

By karthikeyan VFirst Published Feb 19, 2021, 10:48 PM IST
Highlights

தன் மீது நம்பிக்கை வைத்து தன்னை ஏலத்தில் எடுத்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அர்ஜுன் டெண்டுல்கர் நன்றி தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலத்தில் அனைவரும் எதிர்பார்த்ததை போலவே சச்சின் டெண்டுல்கர் மகனும் இடது கை ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டருமான அர்ஜுன் டெண்டுல்கரை ரூ.20 லட்சம் என்ற அவரது அடிப்படை விலைக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. 

அர்ஜுன் டெண்டுல்கர் தான் ஏலத்தின் கடைசி வீரர். அவரை அடிப்படை விலைக்கு மும்பை இந்தியன்ஸ் எடுத்தது. அர்ஜுன் டெண்டுல்கர் திறமையானவர் என்றாலும், சச்சின் டெண்டுல்கருக்காக அவரை கண்டிப்பாக மும்பை அணி எடுக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்தவகையில் அந்த அணி தான் எடுத்தது.

இதையடுத்து, திறமை என்பதைவிட, சச்சின் டெண்டுல்கரின் மகன் என்பதற்காகவே அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்ததாகவும், வாரிசு அடிப்படையிலான தேர்வு தான் இது என்றும் டுவிட்டரில் ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கினர்.

ஆனால் திறமையின் அடிப்படையில் தான் அர்ஜுனை எடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே கூறியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜெயவர்தனே, முழுக்க முழுக்க திறமையின் அடிப்படையில் தான் அர்ஜுன் டெண்டுல்கரை எடுத்தோம். சச்சின் மகன் என்ற பெரிய டேக் அர்ஜுன் தலையில் தொங்குகிறது. ஆனால் நல்லவேளையாக அர்ஜுன் பேட்ஸ்மேன் கிடையாது; இவர் ஒரு ஃபாஸ்ட் பவுலர். எனவே அர்ஜுன் அர்ஜுனாக பந்துவீசினால் அதைக்கண்டு சச்சின் பெருமைப்படுவார் என நினைக்கிறேன் என ஜெயவர்தனே தெரிவித்தார்.

இந்நிலையில், தான் மும்பை இந்தியன்ஸ் அணியில் எடுக்கப்பட்டது குறித்து ரியாக்ட் செய்துள்ளார் அர்ஜுன் டெண்டுல்கர். இதுகுறித்து டுவீட் செய்த அர்ஜுன் டெண்டுல்கர், என்  மீது நம்பிக்கை வைத்து என்னை அணியில் எடுத்ததற்காக பயிற்சியாளர்கள், அணி உரிமையாளர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக அர்ஜுன் பதிவிட்டுள்ளார்.
 

click me!