டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டி ஆண்டர்சன் அபார சாதனை

Published : Jun 13, 2022, 08:33 PM IST
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டி ஆண்டர்சன் அபார சாதனை

சுருக்கம்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 650 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.  

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 553 ரன்களை குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 539 ரன்களை குவித்தது.

14 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னின்ஸை ஆடிவரும் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 2வது இன்னிங்ஸில் நியூசிலாந்து தொடக்க வீரர் டாம் லேதமை ஜேம்ஸ் ஆண்டர்சன் வீழ்த்தினார்.

இது ஜேம்ஸ் ஆண்டர்சனின் 650வது டெஸ்ட் விக்கெட். இதன்மூலம் 650 டெஸ்ட் விக்கெட்டுகளை எட்டிய முதல் ஃபாஸ்ட் பவுலர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஃபாஸ்ட் பவுலர் மற்றும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான ஆண்டர்சன், இப்போது 650 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளுடன் முத்தையா முரளிதரன் முதலிடத்திலும், 708 விக்கெட்டுகளுடன் ஷேன் வார்ன் இரண்டாமிடத்திலும் உள்ள நிலையில், 3ம் இடத்தில் உள்ள ஆண்டர்சன் இன்னும் 59 விக்கெட் வீழ்த்தினால், ஷேன் வார்னை பின்னுக்குத்தள்ளி 2ம் இடத்திற்கு முன்னேறி வரலாறு படைப்பார்.
 

PREV
click me!

Recommended Stories

இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்?
கிரிக்கெட்டை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? ஐபிஎல் உரிமையாளரை விளாசிய கவுதம் கம்பீர்! என்ன நடந்தது?