LPL 2021 ஃபைனல்: ஜாஃப்னா அணியில் பேட்டிங் ஆடிய எல்லா வீரர்களுமே காட்டடி! கல்லே அணிக்கு மிகக்கடின இலக்கு

Published : Dec 23, 2021, 09:33 PM IST
LPL 2021 ஃபைனல்: ஜாஃப்னா அணியில் பேட்டிங் ஆடிய எல்லா வீரர்களுமே காட்டடி! கல்லே அணிக்கு மிகக்கடின இலக்கு

சுருக்கம்

லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஃபைனலில் முதலில் பேட்டிங் ஆடிய ஜாஃப்னா கிங்ஸ் அணி, 20 ஓவரில் 201 ரன்களை குவித்து 202 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை கல்லே கிளாடியேட்டர்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.  

இலங்கையில் நடத்தப்படும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 2வது சீசன் விறுவிறுப்பாக நடந்த நிலையில், இன்று இறுதிப்போட்டி நடந்துவருகிறது. கடந்த சீசனில் ஃபைனலில் மோதிய கல்லே கிளாடியேட்டர்ஸ் மற்றும் ஜாஃப்னா கிங்ஸ் ஆகிய 2 அணிகள் தான் இந்த சீசனிலும் ஃபைனலில் ஆடுகின்றன.

கடந்த சீசனின் ஃபைனலில் கல்லே அணியை வீழ்த்தி ஜாஃப்னா அணி கோப்பையை வென்றது. இந்த சீசனிலும் கோப்பையை வெல்லும் முனைப்பில் நடப்பு சாம்பியனான ஜாஃப்னா கிங்ஸ் அணியும், கடந்த சீசனில் அடைந்த தோல்விக்கு இந்த சீசனில் பழிதீர்க்கும் முனைப்பில் கல்லே கிளாடியேட்டர்ஸ் அணியும் களமிறங்கின.

ஹம்பண்டோட்டாவில் நடந்துவரும் இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஜாஃப்னா கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. ஜாஃப்னா அணியின் தொடக்க வீரர்கள் அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். தொடக்கம் முதலே பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்த குர்பாஸ், 18 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 35 ரன்கள் அடித்து தனது பணியை செவ்வனே முடித்துவிட்டு பெவிலியன் திரும்பினார்.

அதன்பின்னர் அவிஷ்கா ஃபெர்னாண்டோவுடன் ஜோடி சேர்ந்த டாம் கோலரும் அடித்து ஆடினார். இந்த சீசன் முழுவதுமே சிறப்பாக ஆடிய அவிஷ்கா ஃபெர்னாண்டோ, இறுதி போட்டியிலும் அரைசதம் அடித்தார். 41 பந்தில் 63 ரன்கள் அடித்து அவர் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த ஷோயப் மாலிக் 11 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 23 ரன்களும், கேப்டன் திசாரா பெரேரா 9 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 17 ரன்களும் அடித்தனர். டாம் கோலர் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 41 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 57 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் இருந்தார்.

ஜாஃப்னா கிங்ஸ் அணியில் பேட்டிங் ஆடிய அனைத்து பேட்ஸ்மேன்களுமே அதிரடியாக பேட்டிங் ஆடியதால் 20 ஓவரில் 201 ரன்களை குவித்த ஜாஃப்னா அணி, 202 ரன்கள் என்ற கடின இலக்கை கல்லே கிளாடியேட்டர்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!