2018ல் விராட் கோலியின் பேச்சு தான் இந்திய கிரிக்கெட் அணியின் தலையெழுத்தையே மாற்றியது - ஆலன் டொனால்ட்

By karthikeyan VFirst Published Dec 23, 2021, 8:16 PM IST
Highlights

2018ல் விராட் கோலியின் ஸ்டேட்மெண்ட் தான் இந்திய கிரிக்கெட்டின் தலையெழுத்தையே மாற்றியதாக தென்னாப்பிரிக்க முன்னாள் ஜாம்பவான் ஆலன் டொனால்ட் கூறியுள்ளார்.
 

இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக தென்னாப்பிரிக்காவிற்கு சென்றுள்ளது. முதலில் டெஸ்ட் தொடரும் அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடரும் நடக்கவுள்ளன.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 26ம் தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்காக இரு அணி வீரர்களும் மிகத்தீவிரமாக தயாராகிவருகின்றன.

கடந்த 2018ல் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்தபோது இந்திய அணி 2-1 என டெஸ்ட் தொடரை இழந்தது. அந்த தோல்விக்கு பின்னர் தான், வெளிநாடுகளில் வெறியுடன் ஆடி இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகளை குவித்துவருகிறது.  அந்த தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு பின்னர், இந்திய அணி 2 முறை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இங்கிலாந்தில் சிறப்பாக ஆடியது.

இந்நிலையில், 2018ல் விராட் கோலியின் பேச்சு தான், இந்திய கிரிக்கெட்டின் தலையெழுத்தை மாற்றியதாக தென்னாப்பிரிக்க முன்னாள் ஜாம்பவான் ஆலன் டொனால்ட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஆலன் டொனால்ட், வெளிநாடுகளில் வெற்றி பெற முடியாமல் நம்மை நாம் சிறந்த அணி என்று சொல்லிக்கொள்ள முடியாது என்று கோலி சில ஆண்டுகளுக்கு முன்(2018) கூறினார். அப்போதிலிருந்துதான், வெளிநாடுகளில் டெஸ்ட் வெற்றி என்பதை நோக்கி பணியாற்ற தொடங்கியது இந்திய அணி. அதன்பின்னர் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர் வெற்றி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரை சென்றது என இந்திய அணி அபாரமாக ஆடிவருகிறது. இந்த இந்திய அணி தரமான அணி. விராட் கோலியின் அந்த கூற்றுதான், இந்திய அணியின் தலையெழுத்தையே மாற்றியது. இந்த இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடரை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன் என்றார் ஆலன் டொனால்ட்.
 

click me!