West Indies vs England: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

Published : Dec 23, 2021, 07:10 PM IST
West Indies vs England: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5  டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

இங்கிலாந்து அணி 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் ஆடுகிறது. 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், அதைத்தொடர்ந்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் ஆடுகிறது.

ஜனவரி 22 முதல் 30 வரை 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக பால் காலிங்வுட் நியமிக்கப்பட்டுள்ளார். மார்கஸ் டிரெஸ்கோத்திக் உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒயின் மோர்கன் தலைமையிலான இந்த இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ ஆகிய வீரர்கள் இடம்பெறவில்லை. டெஸ்ட் தொடரில் ஆடவேண்டும் என்பதற்காக அவர்களுக்கு டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஜோஃப்ரா ஆர்ச்சர் காயத்திலிருந்து மீளாததால் அவரும் அணியில் இடம்பெறவில்லை. அதிரடி பேட்ஸ்மேன் டாம் பாண்ட்டனுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி:

ஒயின் மோர்கன், மொயின் அலி, டாம் பாண்ட்டன், சாம் பில்லிங்ஸ், லியாம் டாவ்சன், ஜார்ஜ் கார்டன், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டோன், சாகிப் மஹ்மூத், டைமல் மில்ஸ், டேவிட் பைன், அடில் ரஷீத், ஜேசன் ராய், ஃபில் சால்ட், ரீஸ் டாப்ளி, ஜேம்ஸ் வின்ஸ்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA 2nd T20: சுப்மன் கில், சூர்யகுமார் படுமோசம்..! இந்தியாவை ஊதித்தள்ளிய தென்னாப்பிரிக்கா!
டி20 உலகக்கோப்பை டிக்கெட் வெறும் 100 ரூபாய் தான்! எப்படி புக் செய்வது? முழு விவரம் இதோ!