#PSL2021 இந்த போட்டியிலாவது ஜெயிக்கணும்..! இஸ்லாமாபாத் யுனைடெட் அணி பவுலிங் தேர்வு

Published : Jun 11, 2021, 09:40 PM IST
#PSL2021 இந்த போட்டியிலாவது ஜெயிக்கணும்..! இஸ்லாமாபாத் யுனைடெட் அணி பவுலிங் தேர்வு

சுருக்கம்

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.  

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் மார்ச் மாதத்தில் கொரோனா காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 9ம் தேதி முதல் மீண்டும் நடத்தப்பட்டுவருகிறது.

இதில் 9ம் தேதி நடந்த போட்டியில் லாகூர் அணியிடம் தோற்ற இஸ்லாமாபாத் அணி, இன்றைய போட்டியில் குவெட்டா கிளாட்டியேட்டர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் அணி கேப்டன் ஷதாப் கான் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து குவெட்டா அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி:

ஃபாஃப் டுப்ளெசிஸ், உஸ்மான் கான், ஜாக் வெதரால்டு, சர்ஃபராஸ் அகமது(கேப்டன், விக்கெட் கீப்பர்), அசாம் கான், ஆண்ட்ரே ரசல், முகமது நவாஸ், ஜாக் வில்டெர்முத், முகமது ஹஸ்னைன், ஷேஷாத், ஜாஹித் மஹ்மூத்.

இஸ்லாமாபாத் யுனைடெட் அணி:

காலின் முன்ரோ, உஸ்மான் கவாஜா, ஹுசைன் டலட், ரொஹைல் நசீர்(விக்கெட் கீப்பர்), ஷதாப் கான்(கேப்டன்), இஃப்டிகார் அகமது, ஆசிஃப் அலி, ஹசன் அலி, முகமது மூசா, அகிஃப் ஜாவேத், முகமது வாசிம்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ T20: இதுக்கு மேல சான்ஸ் இல்ல‌.. சஞ்சு சாம்சன் அதிரடி நீக்கம்?.. இளம் வீரருக்கு நிரந்தர இடம்!
மின்னல் வேக அரை சதம்.. SKY சாதனையை முறியடித்து அபிஷேக் சர்மா 'மெகா' சாதனை!