BAN vs IND: ஒருநாள் கிரிக்கெட்டில் இஷான் கிஷனின் முதல் சதம்.. விராட் கோலி அரைசதம்..! தவான் மீண்டும் ஏமாற்றம்

Published : Dec 10, 2022, 01:36 PM IST
BAN vs IND: ஒருநாள் கிரிக்கெட்டில் இஷான் கிஷனின் முதல் சதம்.. விராட் கோலி அரைசதம்..! தவான் மீண்டும் ஏமாற்றம்

சுருக்கம்

வங்கதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் அபாரமாக ஆடி சதமடித்தார். விராட் கோலி அரைசதம் அடித்தார். தவான் வெறும் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், இஷான் கிஷனும் விராட் கோலியும் இணைந்து சிறப்பாக ஆடிவருகின்றனர்.  

இந்தியா - வங்கதேசம் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று வங்கதேச அணி 2-0 என தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக ஆடாததால் கேஎல் ராகுல் கேப்டன்சி செய்கிறார். ரோஹித்துக்கு பதிலாக இஷான் கிஷன் தொடக்க வீரராக ஆடுகிறார். தீபக் சாஹருக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி:

ஷிகர் தவான், இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (கேப்டன், விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், உம்ரான் மாலிக். 

வங்கதேச அணி:

அனாமுல் ஹக், லிட்டன் தாஸ் (கேப்டன்), யாசிர் அலி, ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹிம் (விக்கெட் கீப்பர்), மஹ்மதுல்லா, அஃபிஃப் ஹுசைன், மெஹிடி ஹசன் மிராஸ், எபடாட் ஹுசைன், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், டஸ்கின் அகமது.
 
முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 8 பந்தில் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரரான இளம் வீரர் இஷான் கிஷன் அதிரடியாக பேட்டிங்  ஆடி வேகமாக ஸ்கோர் செய்து நல்ல தொடக்கத்தை இந்திய அணிக்கு அமைத்து கொடுத்தார். 3ம் வரிசையில் இறங்கிய கோலி, இஷான் கிஷனுடன் இணைந்து சிறப்பாக ஆடிவருகிறார்.

அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதமடித்தார். விராட் கோலி அரைசதம் அடித்தார். இஷான் கிஷன் சதத்திற்கு பின்னர் காட்டடி அடித்து சிக்ஸர் மழை பொழிந்துவருகிறார். அதனால் இந்திய அணியின் ஸ்கோர் அதிவேகமாக உயர்ந்துவருகிறது. 27 ஓவரில் இந்திய அணி 205 ரன்களை குவித்துள்ளது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs ENG 1st T20: இந்திய அணியில் 4 வீரர்கள் அதிரடி நீக்கம்! சஞ்சு சாம்சனுமா? பிளேயிங் லெவன்!
IRE vs IND T20: இந்தியாவின் மோசமான தோல்விக்கு 5 பெரும் காரணங்கள்! இந்த' 2 வீரர்கள் படுமோசம்!