ராகுல் டிராவிட் கிரேட் கேப்டன் என்பதற்கு இந்த ஒரு விஷயம் போதும்..! இதுவரை யாருமே வெளியிடாத அரிய தகவல்

By karthikeyan VFirst Published Jun 28, 2020, 5:02 PM IST
Highlights

ராகுல் டிராவிட்டின் கேப்டன்சியை வெகுவாக புகழ்ந்துள்ளார், இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான்.
 

ராகுல் டிராவிட்டின் கேப்டன்சியை வெகுவாக புகழ்ந்துள்ளார், இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான்.

இந்திய கிரிக்கெட் அணி பல இக்கட்டான சூழல்களில் இருந்தபோது, சிறப்பாக ஆடி இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர் ராகுல் டிராவிட். அதனால் தான் இந்தியாவின் சுவர் என்றழைக்கப்படுகிறார் ராகுல் டிராவிட்.  தலைசிறந்த பேட்ஸ்மேனான ராகுல் டிராவிட்டுக்கு அவருக்கு கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்கவில்லை. இந்திய அணியின் கேப்டனாக அவர் சிறப்பாக செயல்பட்டபோதிலும், கேப்டனாகவும் அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. 

ராகுல் டிராவிட்டுக்கு ஒரு பேட்ஸ்மேனாக எப்படி கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லையோ, அதேபோலத்தான் கேப்டன்சியிலும் குறைத்து மதிப்பிடப்பட்டார். இந்திய அணியை 25 டெஸ்ட் மற்றும் 79 ஒருநாள் போட்டிகளில் ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்து வழிநடத்தியுள்ளார். ராகுல் டிராவிட் சிறந்த கேப்டன் தான். அவரது கேப்டன்சியில் டெஸ்ட் கிரிக்கெட்டில், வெளிநாடுகளில் இந்திய அணி தொடர்களை வென்றுள்ளது.

இந்தியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரரும் மிகச்சிறந்த கேப்டனுமான ராகுல் டிராவிட்டிற்கு அவருக்கு கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதும், அவர் குறைத்து மதிப்பிடப்பட்டுவிட்டார் என்பதும், அவரது கேப்டன்சியின் கீழ் ஆடிய சில வீரர்களின் ஆதங்கமாக உள்ளது. 

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் கூட, அண்டர் 19 - இந்தியா ஏ அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து பல சிறந்த வீரர்களை இந்திய அணிக்கு உருவாக்கி கொடுத்தார். தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக உள்ளார். 

ராகுல் டிராவிட் குறைத்து மதிப்பிடப்பட்டார் என்று கம்பீர் கூறியிருந்த நிலையில், இர்ஃபான் பதானும் ராகுல் டிராவிட்டின் கேப்டன்சி குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்துவருகிறார். 

அந்தவகையில், ராகுல் டிராவிட்டின் கேப்டன்சியில் அதிகமான போட்டிகளில் ஆடியிருக்கும் இர்ஃபான் பதான், ராகுல் டிராவிட்டை பற்றி ஆங்கில ஸ்போர்ட்ஸ் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார். 

ராகுல் டிராவிட் குறித்து பேசிய இர்ஃபான் பதான், ராகுல் டிராவிட் 100% சிறந்த கேப்டன். அணியிடமிருந்து என்ன தேவை என்பது டிராவிட்டுக்கு தெளிவாக தெரியும். ராகுல் டிராவிட் உலக கிரிக்கெட்டில் அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

ஒவ்வொரு கேப்டனும் வித்தியாசமான அணுகுமுறையை கொண்டவர்கள். அந்தவகையில், ராகுல் டிராவிட்டும் வித்தியாசமாக சிந்திக்கக்கூடிய கேப்டன். வீரர்களுடனான ராகுல் டிராவிட்டின் கம்யூனிகேஷன் தெளிவாக இருக்கும். இதுதான் உனது ரோல்; அதற்கேற்றபடி தயாராகி கொள்ளுங்கள் என்று தெளிவாக சொல்லிவிடுவார். 

ஒரு வீரரும் எதையும் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று விரும்பினார். அணிக்காக எதையும் செய்ய வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இருந்ததே டிராவிட் தான். அணிக்கு தேவை என்றால், விக்கெட் கீப்பிங் செய்வார். தொடக்க வீரராகவும் இறங்குவார், 3ம் வரிசையிலும் இறங்குவார், அதற்குப்பின்னான வரிசைகளிலும் இறங்கி ஆடுவார். நிறைய பேர் ராகுல் டிராவிட்டை சிறந்த ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேனாக ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். ராகுல் டிராவிட் அணிக்கான வீரர், சிறந்த டீம் பிளேயர். அவரது கேப்டன்சியும் அணிக்கானதாக மட்டுமே இருக்கும்.

எந்த நேரத்திலும் அணுகக்கூடிய கேப்டனாக ராகுல் டிராவிட் மட்டுமே இருந்தார். நள்ளிரவு 2 மணிக்கு அவரை  அழைத்து சந்தேகம் கேட்டாலும், தீர்த்துவைப்பார். வீரர்களுடன் நல்ல தொடர்பில் இருக்க வேண்டும். வீரர்களுடனான கம்யூனிகேஷனில் சிறந்த கேப்டன் ராகுல் டிராவிட் தான் என்று இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். 
 

click me!