முக்கியமான போட்டியில் அயர்லாந்தை குறைந்த ரன்னுக்கு சுருட்டிய நமீபியா..! வெற்றி யாருக்கு..?

By karthikeyan VFirst Published Oct 22, 2021, 5:18 PM IST
Highlights

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேற வெற்றி பெற்றே தீர வேண்டிய முக்கியமான தகுதி போட்டியில் அயர்லாந்தை 125 ரன்களுக்கு சுருட்டியது நமீபியா அணி.
 

டி20 உலக கோப்பை தொடரில் தகுதி போட்டிகள் இன்றுடன் முடிகின்றன. நாளை முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. ஸ்காட்லாந்து, வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய 3 அணிகளும் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், கடைசி(4வது) அணியை தீர்மானிக்கும் தகுதிப்போட்டி ஷார்ஜாவில் நடந்துவருகிறது. 

ஷார்ஜாவில் அயர்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையே நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது. அயர்லாந்து அணி அதன் தொடக்க வீரர்கள் பால் ஸ்டர்லிங் மற்றும் கெவின் ஓ பிரயன் ஆகிய இருவரையுமே அதிகமாக சார்ந்திருக்கும் நிலையில், இந்த போட்டியிலும் அவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பின்னர் மற்ற அனைவருமே மளமளவென ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதிரடியாக ஆடிய பால் ஸ்டர்லிங் 24 பந்தில் 38 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 24 பந்தில் 25 ரன்களுக்கு கெவின் ஓ பிரயனும் ஆட்டமிழந்தார். கேப்டன் பால்பிர்னி 21 ரன்கள் அடித்தார். 4வது விக்கெட்டாக பால்பிர்னி ஆட்டமிழந்த போது அயர்லாந்தின் ஸ்கோர் 16.1 ஓவரில் 101 ரன்கள். அதன்பின்னர் பின்வரிசை வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு அயர்லாந்து அணி வெறும் 125 ரன்கள் மட்டுமே அடித்தது.

126 ரன்கள் என்ற எளிய இலக்கை நமீபியா விரட்டுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். 
 

click me!