டி20 உலக கோப்பையை அந்த அணி தான் வெல்லும்.. ஆஸி., அணி இதுக்குலாம் சரியா வரமாட்டாங்க..! பிரெட் லீ அதிரடி

By karthikeyan VFirst Published Oct 22, 2021, 3:32 PM IST
Highlights

டி20 உலக கோப்பையை இந்திய அணி தான் வெல்லும் என்று ஆஸி., முன்னாள் ஃபாஸ்ட் பவுலிங் ஜாம்பவான் பிரெட் லீ கருத்து தெரிவித்துள்ளார்.
 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் டி20 உலக கோப்பையை தூக்கும் முனைப்பில் உள்ளது இந்திய அணி. விராட் கோலி தலைமையில் முதல் ஐசிசி டிராபியை வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் உள்ள இந்திய அணி, பயிற்சி  போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளை அசால்ட்டாக வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் பேலன்ஸ் நன்றாக உள்ளது. 

இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக மதிப்பிடப்படுகிறது. டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள இந்திய அணி, அதற்காக தோனியை ஆலோசகராகவும் நியமித்துள்ளது. தோனியின் ஆலோசனைகள், வியூகங்கள் கண்டிப்பாக இந்திய அணிக்கு பெரிய பலமாக அமையும்.

அதுமட்டுமல்லாது, டி20 உலக கோப்பை போட்டிகள் நடக்கும் இதே அமீரக ஆடுகளங்களில் தான் ஐபிஎல் நடந்து முடிந்துள்ளது. இந்திய அணி வலுவான அணியாக இருப்பதுடன், ஐபிஎல்லில் ஆடி பழக்கப்பட்ட அதே அமீரக ஆடுகளங்களில் டி20 உலக கோப்பையில் இந்திய அணி ஆடுவதால் இந்திய அணிக்கு கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகமிருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்லும் என்று பல முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்துவரும் நிலையில், இதுகுறித்து பேசிய பிரெட் லீ, இந்திய அணி தான் டி20 உலக கோப்பையை வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாம்பியன் அணியான ஆஸ்திரேலிய அணி, டி20 கிரிக்கெட்டில் மட்டும் தடுமாறிவருகிறது. இந்த டி20 உலக கோப்பையிலும் ஃபேவரைட்ஸாக ஆஸ்திரேலிய அணி இல்லை.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் மிகப்பெரிய பிரச்னை இதுமட்டும் தான்..! ஆகாஷ் சோப்ரா அதிரடி

ஆஸி., அணி குறித்து பேசிய பிரெட் லீ, ஆஸ்திரேலிய அணி ஐசிசி உலக கோப்பை தொடர்களில் டி20 ஃபார்மட்டில் மட்டும் தான் சோபிக்கமுடியாமல் திணறிவருகிறது.  ஆஸ்திரேலியர்கள் டி20 உலக கோப்பைக்காக காத்திருக்கின்றனர் என்று பிரெட் லீ தெரிவித்தார்.
 

click me!