ஐபிஎல் 16வது சீசன் இறுதிப்போட்டி நடக்கும் அகமதாபாத்தில் மழை பெய்துவருவதால் ஆட்டம் தாமதமாகியுள்ளது.
ஐபிஎல் 16வது சீசன் இன்றுடன் முடிகிறது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் ஃபைனலில் சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
4 முறை சாம்பியன் சிஎஸ்கே மற்றும் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகளுமே சமபலம் வாய்ந்த சிறந்த அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் அகமதாபாத்தில் கனம்ழை பெய்துவருவதால் ஆட்டம் தாமதமாகியுள்ளது. இரு அணிகள் மட்டுமல்லாது ரசிகர்களும் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
இரவு 9.20 மணிக்குள்ளாக மழை நிற்கும் பட்சத்தில் 20 ஓவர்களும் வீசப்பட்டு முழு போட்டியாக நடத்தப்படும். மழை நிற்பதற்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.