IPL 2022: நான் செமயா ஆடுனதுக்கு கௌதம் அண்ணா தான் காரணம் - ஒரே மேட்ச்சில் உலக ஃபேமஸான இளம் வீரர்

Published : Mar 30, 2022, 06:02 PM ISTUpdated : Mar 30, 2022, 06:04 PM IST
IPL 2022: நான் செமயா ஆடுனதுக்கு கௌதம் அண்ணா தான் காரணம் - ஒரே மேட்ச்சில் உலக ஃபேமஸான இளம் வீரர்

சுருக்கம்

ஐபிஎல் 15வது சீசனில் குஜராத் டைட்டன்ஸூக்கு எதிரான போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் இளம் வீரர் ஆயுஷ் பதோனி, முழு கிரெடிட்டையும் கௌதம் கம்பீருக்கு கொடுத்துள்ளார்.  

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை கட்டமைத்த கம்பீர்:

ஐபிஎல் 15வது சீசனில் புதிதாக களமிறங்கியுள்ள லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி கௌதம் கம்பீரின் வழிகாட்டுதலில் கேஎல் ராகுல் தலைமையில் அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் நிறைந்த, ஆல்ரவுண்டர்கள் நிரம்பிய சிறந்த அணியை கட்டமைத்தது.

ஐபிஎல்லில் கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்தபோது அந்த அணிக்கு 2 முறை கோப்பையை வென்றுகொடுத்த கேப்டன் கௌதம் கம்பீர். ஐபிஎல் கோப்பையை எப்படி வெல்ல வேண்டும் என்ற உத்தியை அறிந்த கம்பீர், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி வீரர்களுக்கு சிறப்பாக வழிகாட்டிவருகிறார். 

ஆயுஷ் பதோனி அபாரமான பேட்டிங்:

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி தோல்வியை தழுவியிருந்தாலும், லக்னோ அணியின் இளம் வீரர் ஆயுஷ் பதோனியின் பேட்டிங் அந்த அணிக்கு பெரிய நம்பிக்கையளிக்கும் விஷயமாக அமைந்தது. 

29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை லக்னோ அணி இழந்திருந்த இக்கட்டான சூழலில் களத்திற்கு வந்த பதோனி, களத்தில் நிலைக்க சிறிது நேரம் எடுத்துக்கொண்டார். அதன்பின்னர் அதிரடியாக அடித்து ஆடி 41 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 54 ரன்களை விளாசினார்.  விக்கெட் கீப்பர் தலைக்கு மேல் அவர் அடித்த ஸ்கூப் ஷாட் அபாரமானது. அவரது வித்தியாசமான ஷாட்டுகளை கண்டு அசந்துபோன லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல், பதோனி தங்கள் அணியின் பேபி ஏபி என்று புகழ்ந்திருந்தார்.

ஆயுஷ் பதோனி கருத்து:

இந்நிலையில், தான் நன்றாக பேட்டிங் ஆடியதற்கான காரணம் குறித்து பேசிய ஆயுஷ் பதோனி, நிறைய புதிய ஷாட்டுகள் ஆடும் திறனை வளர்த்துக்கொண்டேன். அதுதான் எனக்கு டி20 கிரிக்கெட்டில் உதவுகிறது. 3 ஆண்டுகளாக எனது பெயர் ஐபிஎல் ஏலத்தில் இடம்பெறுகிறது. ஆனால் என்னை எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை. இந்த முறை என்னை லக்னோ அணி எடுத்தது. கௌதம் அண்ணா எனக்கு முழு ஆதரவு அளிக்கிறார். பந்தை பார்த்து ஆடு; பவுலரை பார்த்து ஆடாதே என்று எனக்கு அறிவுறுத்தினார். அதுதான் எனக்கு மிகுந்த நம்பிக்கையளித்தது. எனது இயல்பான ஆட்டத்தை ஆடுமாறு கூறினார். அதுதான் எனக்கு ஃப்ரீயாக ஆட உதவியாக இருந்தது என்று பதோனி தெரிவித்துள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்?
கிரிக்கெட்டை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? ஐபிஎல் உரிமையாளரை விளாசிய கவுதம் கம்பீர்! என்ன நடந்தது?