
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான போட்டி புனேவில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 210 ரன்களை குவித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக பேட்டிங் ஆடி 55 ரன்களை விளாசினார். ஜோஸ் பட்லர் (35), தேவ்தத் படிக்கல் (41), ஷிம்ரான் ஹெட்மயர் (32) ஆகிய மூவரும் நல்ல பங்களிப்பு செய்ய 20 ஓவரில் 210 ரன்களை குவித்தது.
இதையும் படிங்க - RCB vs KKR பலப்பரீட்சை.. இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
211 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மார்க்ரம் சிறப்பாக ஆடி 57 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகவில்லை. 8ம் வரிசையில் இறங்கிய வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக பேட்டிங் ஆடி 14 பந்தில் 40 ரன்கள் அடித்தார். வில்லியம்சன், பூரன், அபிஷேக் ஷர்மா, திரிபாதி ஆகிய வீரர்கள் படுமோசமாக சொதப்பியதால் 20 ஓவரில் 149 ரன்கள் மட்டுமே அடித்து 61 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது சன்ரைசர்ஸ் அணி.
பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சன்ரைசர்ஸ் அணி மீது முழுக்க முழுக்க ஆதிக்கம் செல்லுத்தி அபார வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
இதையும் படிங்க - Pakistan vs Australia முதல் ஒருநாள் போட்டி: சொந்த மண்ணில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி
இந்த போட்டியில் பந்துவீச, ஒதுக்கப்பட்ட நேரத்தை விட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிக நேரம் எடுத்துக்கொண்டது. இதையடுத்து அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது பிசிசிஐ. கேன் வில்லியம்சன் மிகச்சிறந்த கேப்டன். அவர் இதுமாதிரி தவறுகள் செய்வது அரிதினும் அரிது. ஆனால் இந்த போட்டியில் பந்துவீச சன்ரைசர்ஸ் அணி அதிக நேரம் எடுத்துக்கொண்டதையடுத்து, அபராதம் கட்டுகிறார்.