IPL 2021 திறமையான பிளேயர்.. ஆனால் மூளையை யூஸ் பண்றது இல்ல..! ஆர்சிபி அதிரடி பேட்ஸ்மேனை கடுமையாக சாடிய சேவாக்

By karthikeyan VFirst Published Sep 27, 2021, 4:15 PM IST
Highlights

க்ளென் மேக்ஸ்வெல் திறமையான வீரர் தான்; ஆனால் மூளையை பயன்படுத்துவது இல்லை என்று மேக்ஸ்வெல்லை வீரேந்திர சேவாக் மிகக்கடுமையாக சாடியுள்ளார்.
 

பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆடிவந்த க்ளென் மேக்ஸ்வெல் தொடர்ந்து சொதப்பியதன் விளைவாக, அவரை அந்த அணி கழட்டிவிட்டது. க்ளென் மேக்ஸ்வெல்லின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவரை ஐபிஎல் 14வது சீசனுக்கு ஒப்பந்தம் செய்தது ஆர்சிபி அணி.

ஐபிஎல் 14வது சீசனில் இந்தியாவில் நடந்த முதல் பாகத்தில் மேக்ஸ்வெல் ஓரளவிற்கு நன்றாகவே ஆடினார். கடந்த சீசன்களில் ஆடியதை விட சிறப்பாகவே ஆடினார். மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான நேற்றைய போட்டியில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த மேக்ஸ்வெல், 37 பந்தில் 56 ரன்கள் அடித்தார்.  மேக்ஸ்வெல்லின் அதிரடி அரைசதத்தால் தான் அந்த அணி 20 ஓவரில் 165 ரன்கள் அடித்து, மும்பை இந்தியன்ஸை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

மேக்ஸ்வெல்லிடம் இருந்து, ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இப்படியான அதிரடி பேட்டிங்கைத்தான் ஆர்சிபி அணி எதிர்நோக்கியிருந்தது. இந்நிலையில், அப்படியான ஒரு பேட்டிங்கை ஆடியுள்ளார் மேக்ஸ்வெல்.

இந்நிலையில், மேக்ஸ்வெல் குறித்து பேசிய வீரேந்திர சேவாக், மேக்ஸ்வெல்லிடம் திறமை அதிகமாக இருக்கிறது. அவர் திறமையான பேட்ஸ்மேன் தான். ஆனால் மூளையைத்தான் அவர் பயன்படுத்துவதில்லை. மும்பைக்கு எதிராக மூளையை கொஞ்சம் பயன்படுத்தினார். அதனால் தான் ஸ்கோர் செய்தார். நான் மேக்ஸ்வெல்லுக்கு எதிரானவன் அல்ல; அவர் மீது எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. அவர் ஆடும் விதத்திற்குத்தான் நான் எதிரானவன். அவர் திறமையான வீரர். பல நேரங்களில் ஆட்டத்தின் சூழலை கருத்தில்கொண்டு அவர் ஆடுவதில்லை. அதுதான் பிரச்னை என்றார் சேவாக்.
 

click me!