இந்தியாவால் மட்டும் தான் ஒரே நேரத்தில் 3 வித போட்டிகளுக்கும் அணியை களம் இறக்க முடியும் - ஆஸி. வீரர் புகழாரம்

இந்திய அணியால் மட்டுமே ஒரே நேரத்தில் 3 ஃபார்மட்களுக்கும் அணியை களம் இறக்க முடியும் என ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

Indias Unmatched Cricket Depth Three Teams One Day Mitchell Starc vel

Team India: ஒரே நேரத்தில் டி20, ஒருநாள், டெஸ்ட் டீம் என 3 போட்டிகளுக்கும் அணியை களமிறக்க இந்தியாவால் மட்டும்தான் முடியும் என ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றில் பேசும்போது, 'ஒரே நாளில் டெஸ்ட் டீம், ஒருநாள் டீம், டி20 என ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு அணியைக் களமிறக்க இந்தியாவால் மட்டும் தான் முடியும். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட், இங்கிலாந்தில் ஒருநாள், தென்னாப்பிரிக்காவில் டி20 அணியை இந்தியா களமிறக்கலாம். அந்த அளவிற்கு போட்டி போடும் அணி இந்தியா. இந்தத் திறமை வேற எந்த நாட்டுக்கும் இல்லை' என பாராட்டியுள்ளார்.

Latest Videos

மேலும், ஐபிஎல் தொடர் இந்திய வீரர்களுக்கு சாதகமாக இருக்குமா என கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில், நாங்கள் உலகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் விளையாடுவோம். ஆனால் இந்தியர்கள் ஐபிஎல் மட்டும்தான் விளையாடுவாங்க' என சொல்லிருக்காரு.

'ஐபிஎல் தொடரால் இந்திய கிரிக்கெட்ட வீரர்களுக்கு மட்டும்தான் லாபம் என சொல்ல முடியாது. ஏனென்றால் இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் மட்டும்தான் கலந்து கொள்வார்கள். ஆனால் மற்ற கிரிக்கெட் வீரர்கள் உலகத்தில் உள்ள அதிகமான டி20 தொடர்களில் கலந்து கொள்வார்கள் என் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

இந்த முறை ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராஃபியை இந்தியா வெற்றி பெற்றது தனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. ஆனால் இப்பொழுது இருக்கின்ற இந்திய அணி இதுவரைக்கும் இருந்த அணிகளிலேயே சிறந்தது என சொல்ல முடியாது. 'உண்மையை சொல்ல வேண்டுமென்றால் டீம் இந்தியா சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரில் கோப்பையை வென்றது எனக்கு ஆச்சரியம் கொடுக்கவில்லை. உண்மைய சொல்ல வேண்டுமென்றால் நான் ஐசிசி சாம்பியன்ஸ் தொடரின் எந்த போட்டியையும் முழுமையாக பார்க்கவில்லை. ஆஸ்திரேலியா விளையாடிய சில போட்டிகளின் சில துணுக்குகள மட்டும்தான் பார்த்தேன். நான் கடந்த் முறை ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியில் வருண் சக்கரவர்த்தியோடு விளையாடியுள்ளேன். அவர் ஒரு திறமையான வீரர்.

இப்ப இருக்குற இந்திய டீம் ஒருநாள் கிரிக்கெட்ல பெஸ்ட்டான்னு கேட்டா டீம் இந்தியா ரசிகர்கள் ஆமான்னு சொல்லலாம், ஆனா என்ன கேட்டா இல்லன்னுதான் சொல்லுவேன்னு மிட்செல் ஸ்டார்க் சொல்லிருக்காரு. 

செமிஸ்லயே தோத்த ஆஸ்திரேலியா: 8 டீம் கலந்துக்கிட்ட 2025 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராஃபி டூர்னில ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா டீம் செமிஃபைனல்ல டீம் இந்தியா கிட்ட தோத்து தன்னோட பயணத்த முடிச்சுக்கிட்டாங்க. ஆஸிஸ் வேகப்பந்து வீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், பேட் கம்மின்ஸ் இல்லாமலும் காங்ரூ படை நாலு பேர் இருக்குற ஸ்டேஜுக்கு வந்துட்டாங்க. செமிஃபைனல்ல ஆஸ்திரேலியா தோத்ததும் ஸ்டீவ் ஸ்மித் இன்டர்நேஷனல் ஒருநாள்ல இருந்து ரிட்டையர் ஆகிட்டாரு.

click me!