வங்கதேச வீரருக்கு வைத்தியம் பண்ண வந்த இந்திய ஃபிசியோ.. நெகிழ்ச்சி வீடியோ

By karthikeyan VFirst Published Nov 22, 2019, 4:35 PM IST
Highlights

இந்தியா - வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்துவருகிறது. 
 

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. வங்கதேச அணியின் பேட்ஸ்மேன்கள், இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். 

வங்கதேச அணியின் தொடக்க வீரர் இம்ருல் கைஸை 4 ரன்களில் வீழ்த்தினார் இஷாந்த் சர்மா. அதன்பின்னர் கேப்டன் மோமினுல் ஹக் மற்றும் முகமது மிதுன் ஆகிய இருவரும் உமேஷ் யாதவின் ஒரே ஓவரில் டக் அவுட்டாகி வெளியேறினர். வங்கதேச அணியின் நம்பிக்கை நட்சத்திரமான முஷ்ஃபிகுர் ரஹீமும் ஒரு ரன் கூட எடுக்காமல் ஷமியின் பந்தில் டக் அவுட்டானார். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தொடக்க வீரர் ஷத்மான் இஸ்லாம் ஆடிக்கொண்டிருந்தார். 29 ரன்கள் அடித்திருந்த அவரை உமேஷ் யாதவ் வீழ்த்தினார். மற்றொரு அனுபவ வீரரான மஹ்மதுல்லாவும் 6 ரன்களில் நடையை கட்டினார். இதையடுத்து லிட்டன் தாஸுடன் நயீம் ஹசன் ஜோடி சேர்ந்தார். 

ஷமி வீசிய பவுன்ஸர் ஒன்று லிட்டன் தாஸின் தலையை பதம்பார்த்தது. அதனால் அவருக்கு தலையில் வலி ஏற்பட்டது. ஹெல்மெட்டில் அந்த பவுன்ஸர் கடுமையாக தாக்க, அவரை பரிசோதிக்க வேண்டியிருந்ததால், அத்துடன் உணவு இடைவேளை விடப்பட்டது. உணவு இடைவேளை வரை 21.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு வங்கதேச அணி 73 ரன்கள் அடித்திருந்தது. 

தலையில் அடிபட்ட லிட்டன் தாஸ் ரிட்டயர்ட் ஹர்ட் ஆனதால், நயீமுடன் எபாதத் ஹுசைன் ஜோடி சேர்ந்தார். 21வது ஓவரில் லிட்டன் தாஸின் தலையை பதம்பார்த்த, உணவு இடைவேளை முடிந்து வந்ததும் தான் வீசிய முதல் பந்தில் நயீமின் தலையை பதம் பார்த்தார். 23வது ஓவரின் முதல் பந்தை பவுன்ஸராக வீசினார் ஷமி. அந்த பவுன்ஸர் நயீமின் தலையில் அடித்தது. வங்கதேச அணியின் ஃபிசியோ லிட்டன் தாஸுடன் பிசியாக இருப்பதால், நயீமை பரிசோதிக்க ஃபிசியோ இல்லை. அம்பயர் இந்த தகவலை இந்திய கேப்டன் விராட் கோலியிடம் தெரிவித்ததும், உடனடியாக இந்திய அணியின் ஃபிசியோவை வரவழைத்தார் கேப்டன் கோலி. 

இந்திய அணியின் ஃபிசியோ நிதின் படேல் உடனடியாக வந்து நயீமை பரிசோதித்தார். விளையாட்டின் ஸ்பிரிட்டை வெளிப்படுத்தும் விதமான அந்த வீடியோவை பிசிசிஐ டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. 

In the end, it's all about the . physio, Mr. Nitin Patel attends to Nayeem after he gets hit on the helmet. pic.twitter.com/pFXsUfXAUY

— BCCI (@BCCI)

எபாடட் ஹுசைன் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, லிட்டன் தாஸுக்கு பதிலாக மாற்று வீரராக களமிறங்கிய மெஹிடி ஹசன், 8 ரன்களில் ஆட்டமிழந்தார். வங்கதேச அணி 98 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 
 

click me!