அண்டர் 19 உலக கோப்பையில் வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி

By karthikeyan VFirst Published Feb 5, 2020, 1:27 PM IST
Highlights

அண்டர் 19 உலக கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று, இறுதி போட்டிக்குள் நுழைந்த இந்திய அணி, வரலாற்று சாதனை படைத்துள்ளது. 
 

அண்டர் 19 உலக கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையில் ப்ரியம் கர்க் தலைமையிலான இந்திய அணி, அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்தது. லீக் சுற்றில் ஒரு போட்டியில் தோற்காமல் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, அரையிறுதியில் பாகிஸ்தானை அசால்ட்டாக வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

லீக் சுற்றில், இலங்கை, ஜப்பான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, அரையிறுதியில் பாகிஸ்தானை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 173 ரன்கள் என்ற எளிய இலக்கை இந்திய அணியின் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் சக்ஸேனாவும் இணைந்தே அடித்துவிட்டனர். ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார். 

இந்திய அணி தொடர்ச்சியாக மூன்றாவது முறை அண்டர் 19 உலக கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. 2016, 2018 ஆகிய உலக கோப்பைகளை தொடர்ந்து தற்போது தொடர்ந்து மூன்றாவது முறையாக ஃபைனலுக்கு முன்னேறியிருக்கிறது. இதன்மூலம் அண்டர் 19 உலக கோப்பையில் தொடர்ச்சியாக மூன்று முறை இறுதி போட்டிக்கு முன்னேறிய அணி என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளது இந்திய அணி. 

Also Read - உலக கோப்பை அணியில் புறக்கணிக்கப்பட்ட ராயுடு.. முதல் முறையாக மௌனம் கலைத்த எம்.எஸ்.கே.பிரசாத்

2016 உலக கோப்பை இறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸிடம் தோற்றது இந்திய அணி. 2018ல் பிரித்வி ஷா தலைமையிலான இந்திய அணி, கோப்பையை வென்றது. இந்நிலையில், இம்முறையும் ஃபைனலுக்கு முன்னேறியுள்ள இந்திய அணி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஏனெனில் அடுத்த அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தும் வங்கதேசமும் மோதுகின்றன. இந்த இரண்டில் எந்த அணி இறுதி போட்டிக்கு வந்தாலும், அந்த அணியை வீழ்த்துவது இந்திய அணிக்கு பெரிய கஷ்டமான காரியமாக இருக்காது. 

click me!