இதுக்கு முன்னாடி அவரு இவ்வளவு வெறித்தனமா ஆடி நான் பார்த்ததே இல்ல!! இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய கேப்டன் கோலி

By karthikeyan VFirst Published Mar 4, 2019, 12:13 PM IST
Highlights

அவர் இந்தளவிற்கு மெலிந்து நான் பார்த்ததே இல்லை. அதுமட்டுமல்லாமல் இதற்கு முன் இந்தளவிற்கு வேட்கையுடன் ஆடியும் நான் பார்த்ததில்லை - கேப்டன் விராட் கோலி

உலக கோப்பையை வெல்லும் பிரதான அணிகளில் ஒன்றாக இந்திய அணி பார்க்கப்படுகிறது. கோலி தலைமையிலான இந்திய அணி மற்றும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆகிய 2 அணிகளில் ஒன்றே உலக கோப்பையை வெல்லும் அணியாக முன்னாள் ஜாம்பவான்களால் பார்க்கப்படுகிறது. 

இந்த உலக கோப்பையில் இந்திய அணியின் மிகப்பெரிய பலம் பவுலிங். பொதுவாக நல்ல பேட்டிங் அணியாகவே திகழ்ந்த இந்திய அணி தற்போது சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. பும்ரா, ஷமி ஆகிய இருவரும் வேகத்தில் மிரட்டுகின்றனர். குல்தீப் யாதவ் சுழலில் எதிரணிகளை தெறிக்கவிடுகிறார். 

தனது சொந்த வாழ்க்கையில் பல பிரச்னைகளை எதிர்கொண்ட ஷமி, கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் அணியில் இணைந்தார். பிரச்னைகளிலிருந்து மீண்டு மீண்டும் அணியில் இணைந்த ஷமி, தற்போது பவுலிங்கில் மிரட்டுகிறார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக பந்துவீசி தொடர் நாயகன் விருதை வென்றார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு போட்டிகளிலுமே அபாரமாக வீசிவருகிறார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்துவரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் அபாரமாக வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, அவரது பந்தில் ரன் அடிக்க விடாமல் நெருக்கடியை ஏற்படுத்தினார். ஷமியின் பவுலிங் நல்ல வேகத்துடன் ஸ்விங் ஆகிறது. எனவே பும்ராவுடன் சேர்த்து அவரது பவுலிங் உலக கோப்பையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புவனேஷ்வர் குமார் - பும்ரா ஜோடிதான் வேகப்பந்து ஜோடியாக திகழ்ந்தது. ரிசர்வ் வேகப்பந்து வீச்சாளராகத்தான் மீண்டும் அணியில் இணைந்தார் ஷமி. ஷமியின் அபாரமான பவுலிங்கால் புவனேஷ்வர் குமாரை பென்ச்சில் உட்காரவைத்துவிட்டு உலக கோப்பையில் பும்ராவுடன் ஷமி இறக்கப்பட வாய்ப்புள்ளது. அந்தளவிற்கு மிரட்டலாக வீசிவருகிறார் ஷமி.

உலக கோப்பையில் இந்திய அணியின் மிகப்பெரிய சொத்தாக ஷமி திகழ்வார் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷீஸ் நெஹ்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

ஷமி தனது அபாரமான பவுலிங்கால் கேப்டன், பயிற்சியாளர் என அனைவரின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு பிறகு ஷமி குறித்து பேசிய கேப்டன் கோலி, ஷமி இவ்வளவு மெலிந்து நான் பார்த்ததே இல்லை. மேக்ஸ்வெல்லை அபாரமான பந்தில் போல்டாக்கினார். ஷமி இந்தளவிற்கு விக்கெட் வேட்கையில் ஆடி நான் பார்த்ததே இல்லை. உலக கோப்பை நெருங்கிய நிலையில், ஷமியின் ஃபார்ம் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக உள்ளது என்று கோலி ஷமியை புகழ்ந்து பேசினார். 
 

click me!