அஷ்வினை விட ஜடேஜா தான் நல்ல பவுலர்.. மூஞ்சில அடிச்ச மாதிரி ஓபனா பேசிய கோலி

By karthikeyan VFirst Published Sep 3, 2019, 1:21 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அஷ்வினை சேர்க்காமல் ஜடேஜாவை சேர்த்தது ஏன் என கேப்டன் கோலி அதிரடியாக விளக்கமளித்துள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் லெவனில் எடுக்கப்படாத அஷ்வின், இரண்டாவது போட்டியிலும் அணியில் எடுக்கப்படவில்லை. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமான ரெக்கார்டை வைத்திருக்கும் அஷ்வினின் புறக்கணிப்பு முன்னாள் ஜாம்பவான்களுக்கே அதிர்ச்சிகரமானதாக அமைந்தது. 

முதல் டெஸ்ட் போட்டியில் வர்ணனை செய்துகொண்டிருந்த கவாஸ்கர், அஷ்வினின் புறக்கணிப்பு தனக்கு அதிர்ச்சியளித்ததாக தெரிவித்திருந்தார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நல்ல ரெக்கார்டு வைத்திருக்கும் அஷ்வினுக்கு ஆடும் லெவனில் இடமில்லை. எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது என்று கவாஸ்கர் தெரிவித்திருந்தார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 11 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 60 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அஷ்வின், பவுலிங்கில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் அந்த அணிக்கு எதிராக அசத்தியுள்ளார். டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 4 சதங்களை விளாசியுள்ளார் என்பதும் கடந்த முறை இந்திய அணி வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் சென்றபோது, அஷ்வின் தான் தொடர் நாயகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நல்ல ரெக்கார்டை வைத்திருந்தும் கூட, இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அஷ்வின் புறக்கணிக்கப்பட்டார். அஷ்வினின் புறக்கணிப்பு சர்ச்சையான நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றபிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் கோலி, அஷ்வினுக்கு பதிலாக ஜடேஜா எடுக்கப்பட்டதற்கான காரணத்தை விளக்கினார். 

இதுகுறித்து பேசிய கேப்டன் கோலி, இந்தியாவிற்கு வெளியே மிகவும் துல்லியமான மற்றும் நிலையான பவுலர் ஜடேஜா. அதனால் தான் ஜடேஜாவை ஆடும் லெவனில் எடுத்தோம். ஆடுகளம் பவுலிங்கிற்கு சாதகமாக இல்லாத சூழலிலும் அவர் கட்டுக்கோப்பாக வீசுவார். பந்து நன்றாக திரும்பாத ஆடுகளத்திலும் கூட, சரியான ஏரியாக்களில் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடியவர் ஜடேஜா. எப்போதுமே ஆட்டத்திலேயே இருப்பார். அனைத்து வகையிலும் பங்களிப்பு செய்து, ஆட்டத்தில் தனது இருப்பை பதிவு செய்துகொண்டே இருப்பார். அதுதான் அவருடைய தனித்துவம் மற்றும் பலம் என்று புகழ்ந்தார் கோலி. 

அணிக்காக எப்போதுமே பங்களிப்பு செய்துகொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர். அவர் பந்துவீசுவதற்கான தருணத்திற்காக காத்துக்கொண்டே இருப்பார். அதுமாதிரியான ஒரு வீரர் அணியில் இருக்கும்போது கேப்டனின் பணி எளிதாகும் என்று கோலி தெரிவித்தார். 
 

click me!