சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆண்டுகளை நிறைவு செய்த ரோகித் சர்மா!

By Rsiva kumar  |  First Published Jun 23, 2024, 5:17 PM IST

கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டின் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.


கடந்த 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பிறந்தார். இதையடுத்து கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். முதல் முறையாக கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

சர்வதேச கிரிகெட்டில் ரோகித் சர்மா அறிமுகமாகி இன்றுடன் 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதுவரையில் 262 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா 10,709 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 264 ரன்கள் எடுத்துள்ளார். இதே போன்று 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் மூலமாக டி20 கிரிக்கெட் தொடரில் அறிமுகமானார்.

Tap to resize

Latest Videos

 

MUMBAI INDIANS SPECIAL POSTER FOR ROHIT SHARMA 🇮🇳

- 17 years of Hitman....!!!! pic.twitter.com/2NKLa7P2Ro

— Johns. (@CricCrazyJohns)

 

இதுவரையில் 156 டி20 போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா 4073 ரன்கள் எடுத்துள்ளார். அதோடு 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4137 ரன்கள் எடுத்துள்ளார். இந்த நிலையில் தான் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி இன்றுடன் 17ஆவது ஆண்டை நிறைவு செய்கிறார். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுவரையில் சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மா 18,919 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 48 சதங்கள் மற்றும் 602 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.

 

ROHIT SHARMA COMPLETED 17 YEARS IN INTERNATIONAL CRICKET 🇮🇳

- 18919 runs.
- 43.19 Average.
- 48 Hundreds.
- 602 sixes.

Greatest all-format opener, Hitman of cricket, wishing this year will be remembered forever with T20I WC, Champions Trophy & WTC 2025. 🥇 pic.twitter.com/SLbroIoTNL

— Johns. (@CricCrazyJohns)

 

click me!