இந்திய வீரர்களில் ஹர்திக் பாண்டியா மற்றும் விராட் கோலி இருவர் மட்டுமே டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு அரைசதம் மற்றும் ஒரு விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.
டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இதுவரையில் நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது.
இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 23, விராட் கோலி 37, ரிஷப் பண்ட் 36, ஷிவம் துபே 34 ரன்கள் எடுத்தனர். கடைசி வரை அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இந்தியா 196 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய வங்கதேச அணியானது 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் குவித்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்திய அணியில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இந்த நிலையில் தான் இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா அரைசதம் அடித்ததோடு ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார். இதன் மூலமாக டி20 உலகக் கோப்பை தொடரில் அரைசதம் மற்றும் ஒரு விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
இதற்கு முன்னதாக டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு விக்கெட் கைப்பற்றி அரைசதம் அடித்த இந்திய வீரராக விராட் கோலி சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக டி20 உலகக் கோப்பை தொடரில் அரைசதம் மற்றும் ஒரு விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்களாக விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் சாதனை படைத்துள்ளனர்.