#SLvsIND இலங்கையில் குவாரண்டினை முடித்து களத்தில் இறங்கிய இந்திய வீரர்கள்.. வீடியோ

Published : Jul 03, 2021, 03:28 PM IST
#SLvsIND இலங்கையில் குவாரண்டினை முடித்து களத்தில் இறங்கிய இந்திய வீரர்கள்.. வீடியோ

சுருக்கம்

இலங்கையில் குவாரண்டினை முடித்த இந்திய வீரர்கள் பயிற்சியை தொடங்கிவிட்டனர். பிசிசிஐ டுவிட்டரில் பகிர்ந்த அந்த வீடியோ வைரலாகிவருகிறது.  

விராட் கோலி தலைமையில் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், பும்ரா, ஷமி, ஜடேஜா ஆகியோர் அடங்கிய மெயின் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. 

அதனால் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இலங்கைக்கு ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி சென்றுள்ளது. இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு இலங்கைக்கு சென்றுள்ளார்.  

வரும் 13ம் தேதி முதல் 25ம் தேதி வரை இந்த போட்டிகள் நடக்கவுள்ளன. முதலில் ஒருநாள் தொடரும் அதைத்தொடர்ந்து டி20 தொடரும் நடக்கவுள்ளன.

இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி:

ஷிகர் தவான்(கேப்டன்), புவனேஷ்வர் குமார்(துணை கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, நிதிஷ் ராணா, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சாஹல், ராகுல் சாஹர், கிருஷ்ணப்பா கௌதம், க்ருணல் பாண்டியா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, தீபக் சாஹர், நவ்தீப் சைனி, சேத்தன் சகாரியா.

நெட் பவுலர்கள் - இஷான் போரெல், சந்தீப் வாரியர், அர்ஷ்தீப் சிங், சாய் கிஷோர், சிமர்ஜீத் சிங் 

இந்த தொடருக்காக இலங்கைக்கு சென்றுவிட்ட இந்திய வீரர்கள், குவாரண்டினை முடித்துவிட்டு பயிற்சியை தொடங்கிவிட்டனர். பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் வழிகாட்டுதலின் கீழ் இந்திய வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர். அந்த வீடியோவை பிசிசிஐ டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்ட அந்த வீடியோ டுவிட்டரில் வைரலாகிவருகிறது.
 

PREV
click me!

Recommended Stories

முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!